நிதின் கட்காரி 4 வழிச்சாலைகள் திட்டத்துக்கு அடிக்கள் நாட்டுகிறார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ் சாலையில் 4 வழிச்சாலைகள் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா மார்த்தாண்டத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கின்றனர்.

தமிழ்நாடு-கேரளா எல்லையில் காரோட்டில் இருந்து வில்லுக்குறி வரையில் 27 கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ் சாலையில், 4 வழிச்சாலை அமைக்கவும், வில்லுக்குறியில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு வரை, 42.703 கி.மீ தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கவும், நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த் தாண்டம் சந்திப்புகளில் மேம்பாலம் கட்டவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டது.

அதேபோல திருப்பூர் முதல் அவினாசி பாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையில் 31.800 கிலோ மீட்டருக்கு 4 வழிச் சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இதன்படி, காரோடு முதல் வில்லுக் குறி வரை 4 வழிச் சாலை அமைக்க ரூ.1,274 கோடியும், வில்லுக்குறி முதல் கன்னியா குமரி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து காவல் கிணறு வரையிலும் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,041 கோடியும், நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு ரூ.286 கோடியும், திருப்பூர் முதல் அவினாசிபாளையம் வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.162 கோடியும் ஒதுக்கி மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டம் வகுத்தது.

இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா நாளை (செவ்வாய்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பஸ்நிலையம் அருகில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு அடிக்கல் நடுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சாலைபோக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதேபோல தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்பட தமிழகத்தை சேர்ந்த பல எம்.பி.க்கள் கலந்துகொள்கின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...