இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம்பேர் சாலை விபத்தில் சிக்கி இறக்கின்றனர். இதுகோவிட் மரணங்களை விட அதிகம்’ என, அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார்.
வாகன விபத்து பாதுகாப்பு பற்றிய காணொலி கருத்தரங்கை தொடங்கி வைத்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி பேசியதாவது:
இந்தியாபோன்ற வளரும் நாடுகளில் அதிகளவிலான சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்தில்சிக்கி இறக்கின்றனர். இது கோவிட் மரணங்களை விட அதிகம்.சாலை விபத்து இறப்புக்களை 50 சதவீதம் குறைக்க வேண்டும். 2030ம் ஆண்டுக்குள் எந்தவிபத்து மற்றும் இறப்புகளும் ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது தொலைநோக்கு. சாலை விபத்துக்களில் 60 சதவீத மரணங்களில் சிக்குபவர்கள் இருசக்கரவாகன ஓட்டிகள். மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பாதுகாப்புதான் இப்போதைய தேவை.
இந்தியாவில் ஓட்டுநர்களுக்கான சிறந்தபயிற்சி, மேம்பட்ட பயிற்சி மையங்கள் ஆகியவை முக்கியம். நல்லசாலைகளை உருவாக்கி, சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது என் தார்மீக பொறுப்பு. சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நமது இலக்குகளை அடையவும், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |