தமிழக பாஜக முன்னாள் பொறுப்பாளரும், சிக்கிம் மாநில முன்னாள் கவர்னருமான வி.ராமராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் சென்னையில் உள்ள கமலாலயத்தில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பாஜக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிவருகிறது. தேர்தல் எந்தநேரத்தில் வந்தாலும் எதிர்கொள்வோம். தற்போது நாங்கள் தேர்தல் நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தை 22-ந்தேதி கமலாலயத்தில் கூட்ட இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தவும், வாக்கு சாவடி வாரியாக கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இந்தகூட்டங்கள் அடுத்த மாதம் நடைபெறும்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர் களிடம் இருந்து இன்னும் இரண்டுவாரத்தில் விருப்பமனு பெற இருக்கிறோம். பாஜக வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கு பெறும் அளவிற்கு நாங்கள் வலுவாக இருக்கிறோம்.
கன்னியாகுமரியில் நாளை (இன்று) மத்திய மந்திரி நிதின் கட்காரி நெடுஞ்சாலை திட்டத்தை தொடங்கிவைக்கிறார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலுக்கு நாளை மறுநாள் வெங்கையாநாயுடு வருகிறார். இன்னும் பல மந்திரிகள் தமிழகம் வர இருக்கிறார்கள்.
பெட்ரோல், டீசல்மீது விதிக்கப்படும் கலால்வரியில் மத்திய அரசுக்கு 42 சதவீதம் கிடைக்கிறது. மாநில அரசுக்கு 21½ சதவீதம்வரை செல்கிறது. மீதி பணம்தான் மத்திய அரசுக்கு செல்கிறது. அந்த பணமும் தேசிய நெடுஞ்சாலைக்கு சாலை வசதியை மேம்படுத்ததான் பயன்படுத்தப்படுகிறது. பயிர் பாதுகாப்பு திட்டம் மக்கள் நலன் சார்ந்ததுதான்.
வருங்காலத்தில் சட்டசிக்கல்களை சரி செய்து ஜல்லிகட்டு நடத்த பாரதிய ஜனதா அரசு நடவடிக்கை எடுக்கும். இதைவைத்து அரசியல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.