இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே மற்றும் பிரான்ஸ் நாட்டின் தொழில் அதிபர்களுடன் டீம் இந்தியா உயர்மட்ட சந்திப்பு நிகழ்த்தி கொண்டிருக்கிறது. அனேகமாக இழுத்தடித்து கொண்டிருக்கும் ரபேல் போர் விமானங்கள் பற்றிய டீல் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் செயல்பாட்டுக்கு வரலாம்…
எந்த ஒரு நாட்டிற்கு சென்றாலும் கொஞ்சம் ரிலாக்ஸ் அப்புறம் நிறைய பிசினஸ் இது தான் மோடியின் பாலிசி. அதனால் தான் தன்னுடைய வெளிநாட்டு சுற்று பயணங்களின் பொழுது தொழில் அதிபர்களையே கூட்டி செல்வார். இந்திய நாட்டின் தொழில் அதிபர்கள் அயல்நாட்டு அதிபர்களிடம் நேரிடையாக எந்த ஒரு இடைத்தரகரும் இன்றி பேசும்போது சாதக பாதகமான விஷயங்கள் உடனடியாக விவாதிக்கபட்டு முடிவுகள் விரைவில்
எட்டப்படுகின்றது.
இது தான் வளரும் இந்தியாவிற்கு தேவை. இடைதரகர்களுக்கு லஞ்சம் கொடுக்காமல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நம் நாட்டு தொழில் அதிபர்களுடன் பிரதமரின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் செய்யும்போது அதில் ஊழல் நிகழ வாய்ப்பில்லை.
பழைய பிரதமர்கள் எல்லாம் குடும்பம் குட்டியுடன்பத்திரிக்கை யாளர்கள் புடை சூழ வெளிநாடுகள் சென்று விருந்துண்டு மகிழ்ந்து ஊர் சுற்றி பார்த்து விட்டு சம்பிரதாயமாக ஒரு நான்கு பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு வருவது வழக்கம்.
ஆனால் மோடி பிரதமராக வந்தவுடன் பத்திரிக்கையாளர்களை தவிர்த்து விட்டு நாட்டை முன்னேற்ற தொழில் அதிபர்களை அழைத்து செல்ல ஆரம்பித்தவுடன் பத்திரிக்கையாளர்கள் இனி இவரால் நமக்கு காரியம் ஆகாது என்றெண்ணி கொண்டு மதசார்பின்மை மகுடம் சூட்டி கொண்டு மோடியை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.