வகாபிசத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' என்பது சிலை வழிபாட்டு முறைகளை ஒழித்து 'தூய இஸ்லாம்' திசையை நோக்கி தமிழ் முஸ்லிம்களை கொண்டு செல்லும் முயற்சி. வஹாபிசம், சலஃபிசம் போன்ற தீவிர சுன்னி இஸ்லாம் சிந்தனைகளின் விளைவுதான் இது.

இந்த கோட்பாட்டை ஒட்டிதான் பாமியான் புத்தர் சிலைகளை தாலிபான்கள் வெடித்து நொறுக்கினார்கள். இதே கோட்பாட்டை ஒட்டிதான் ஐஎஸ்ஐஎஸ் கும்பல் சிரியா மற்றும் ஈராக் போன்ற தேசங்களில் உள்ள பழமையான இஸ்லாம் அல்லாத வரலாற்றுச் சின்னங்களை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இது மற்ற மதங்களுக்கு மட்டும் பிரச்சனை அல்ல. இந்த சிந்தனையாளர்கள் சூபிஃசம் மற்றும் ஷியா போன்ற இஸ்லாத்தின் உள்ளேயே இருக்கும் பிரிவுகளைக் கூட வெறுக்கிறார்கள். சூஃபி நம்பிக்கையாளர்கள் வழிபடும் தர்கா எனப்படும் இஸ்லாமிய துறவிகளின் சமாதிகள் கூட இந்த 'ஷிர்க் ஒழிப்பின்' கீழ் வரும். பாகிஸ்தானில் நிறைய பழமையான தர்காக்கள் அடித்து நொறுக்கப் பட்டதற்கும் இதே சிந்தனைதான் பயன்பட்டது.

இதே திசையை நோக்கி தமிழ் முஸ்லிம்களை திருப்பும் ஜமாஅத்-தின் இந்த முயற்சி கவலையையும் பயத்தையும் உண்டு பண்ணுகிறது. பெரும்பான்மையாக முஸ்லிம்கள் மட்டுமே உள்ள தேசங்களிலேயே இந்த சிந்தனை கடும் வன்முறைகளை விளைவித்திருக்கிறது என்றால் இந்தியா மாதிரி தெருவுக்கு தெரு பத்து சிலைகளை வைத்து கும்பிட்டுக் கொண்டிருக்கும் தேசங்களில் எப்பேர்ப்பட்ட மத துவேஷங்களை இது உண்டு பண்ணும் என்று கற்பனை செய்யவே முடியவில்லை. '

"நாங்கள் தூய இஸ்லாத்தை பின்பற்றி உருவமில்லா இறைவனை மட்டுமே வழிபடுவோம்.' என்று பிரகடனப் படுத்தும் உரிமை இந்த தீவிர சுன்னிகளுக்கு உண்டு. ஆனால் அதை உறுதி செய்ய அடுத்தவர் தர்காக்கள், கோயில்கள், சர்ச்சுகள் ஆகியவற்றை உடைப்போம் என்று கிளம்புவது ஆபத்தானது.

இந்த வகாபிச சிந்தனைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழ் முஸ்லிம்களுக்கும் இருக்கிறது.

இது நாள் வரை தீவிரவாத சிந்தனைகளுக்கு பெரிதும் இடம் கொடுக்காமல் காத்து வந்திருக்கும் இவர்கள் இந்த 'ஷிர்க் ஒழிப்பு மாநாட்டையும்' புறக்கணித்து தோல்வி அடைய செய்வார்கள் என்று நம்புவோம்.

நன்றி Sridhar subramaniyan..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...