மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை வந்தார். பின்னர் பிரதமர் பேசும் பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானத்தை பார்வை யிட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
வருகிற 2–ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் இருந்துமட்டும் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். மேலும் பிரதமர் வருகையை யொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் வருவார்கள். குறைந்தது 1 லட்சம்பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு முதல்கட்ட பிரசாரமாக இந்த பொதுக் கூட்டம் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தின் தாக்கம் தமிழகம்முழுவதும் இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பா.ஜ.க கமிட்டியினர் சிறப்பாக செய்துவருகின்றனர்.
தேர்தலை பொறுத்தவரை பாரதிய ஜனதா, கட்சி ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும், தயாராகிவருகிறது. பூத் கமிட்டி அமைப்பது முதல் அனைத்து அடிப்படை வேலைகளையும் செய்துவருகிறோம். தேர்தலை மனதில் வைத்து அனைத்து வேலைகளையும் செய்துவருகிறோம்.
கூட்டணியை பொறுத்த வரையில் ஏற்கனவே உள்ள நிலையில்தான் உள்ளோம். மேலும் பலகட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது இவ்வாறு அவர் கூறினார்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.