சமூக வலை தளங்களை கட்டுப் பாட்டுடன் பயன்படுத்த வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்த புரத்தில், போலிஸார்-பொதுமக்கள் நல்லுறவு தொடர்பான தேசியமாநாடு நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய ராஜ்நாத்சிங் போலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு மேம்பட முதலில் மக்களின் நம்பிக்கையை அவர்கள் பெற வேண்டும் என்றார்.
தற்போது போலிஸாருக்கு சவால்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், சட்டம்-ஒழுங்கு பிரச்னைமட்டுமின்றி பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ளார்.
சர்வதேச பயங்கரவாத இயக்கங் களால் ஏற்படும் நேரடி அச்சுறுத்தல்கள் மட்டுமின்றி, இணையம் வழியாகவும், சமூக வலைத் தளங்கள் மூலமும் மறைமுகமாக பயங்கரவாதம் பரவுவதாக குறிப்பிட்டார்.
இதனால் சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் பயன்படுத்த அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நவீன தொழில்நுட்ப சாதனங்கள் போலிஸாருக்கு உதவிகரமாக இருக்கும் அதேசூழலில், சமூக விரோதிகளும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றார் ராஜ்நாத் சிங்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.