ஒரு குடும்பம் எதிர்மறை அரசிய லில் ஈடுபடுகிறது. 400 எம்.பி.க் களிலிருந்து 40 எம்.பி.க்களாக குறைந்துவிட்ட தேர்தல் தோல்விக் காக, மோடியின் பணியைச் செய்ய விடக்கூடாது என அக்குடும்பம் நினைக்கிறது. தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறது. அதற் கான சதி தொடர்ந்து நடக்கிறது.
காங்கிரஸ் அரசை வீழ்த்துவதற் காக வாக்களித்த ஏழைமக்களை பழிவாங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். மோடி, பாஜக, மத்திய அரசை எதிர்த்தாலும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றம் செயல்படவேண்டும், அலுவல்கள் நடைபெற வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், ஒருகுடும்பம் மாநிலங்களவையை செயல்பட அனுமதிக்க வில்லை. இந்நாட்டு மக்கள் அக்குடும்பத்தைத் தோல்வியடையச் செய்ததால், வளர்ச்சியை தடுக்கின்றனர்.
இந்த அரசியலால் நாட்டுக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை. ஒரு குடும்பத்தின் இந்த அழிவுமனப் பான்மை அரசியலை மற்ற எதிர்க்கட்சிகள் விரும் பவில்லை. அசாமில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள். மத்திய அரசுக்கு செவிசாய்க்கும் மாநில அரசு இருந்தா ல்தான் அங்கு நலத்திட்டங்கள் நிறைவேறும்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு புதிய மேம்பாட்டுத் திட்டமாதிரி தேவை. அப்போதுதான், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியாவுடன் இணைந்து இப்பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த வலுவை எட்டமுடியும்.
சமநிலை வாய்ந்த, அனைத்துத் துறை சார்ந்த வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால், நாட்டின் கிழக்கு, மற்றும் வடகிழக்கு பிரதேசங்கள் பின்தங்கியி ருக்கின்றன. இதனால், நாட்டின் வளர்ச்சி முழுமையடைய வில்லை. தற்போது தொடங்கப்பட்டுள்ள இரு திட்டங்களும், 25 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டிருந்தால், புதியதொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் வந்து, அனைத்து துறை சார்ந்த வளர்ச்சி இம்மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும்.
2-ம் தலைமுறையினர் இத்திட்டங்களால் பெரும் பயனடைந்திருப்பர். ஒட்டுமொத்த தலைமுறையும் பயன் பெற வாய்ப்பில்லாமல் போய் விட்டது. தகவல் தொடர்பில் பின் தங்கியிருப்பது, இப்பகுதியின் வளர்ச்சியை பெருமளவு பாதித்துள்ளது.
அசாமில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியது
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.