ஊரகவளர்ச்சி திட்ட இளம் ஆய்வாளர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரை யாடினார். அப்போது ஆய்வாளர்களுக்கு மோடி பாராட்டுதெரிவித்தார்.
பிரதம மந்திரியின் ஊரகவளர்ச்சி திட்ட ஆய்வில் நாடுமுழுவதும் ஏராளமான இளம் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டில் உள்ள கிராமப்புற, பின் தங்கிய மற்றும் மழைவாழ் பகுதிகளில் தங்கி மக்களின் சுகாதாரம், கல்வி, சத்தான உணவு, மகளிர்மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து ஆய்வுசெய்கின்றனர்.
இந்த இளம் ஆய்வாளர்கள் 230 பேர் பிரதமர் மோடியுடன் சந்தித்து கலந்துரையாடினர். இவர்களில் 11 பேர் தாங்கள் நிறைவுசெய்த ஆய்வை பிரதமரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
இளம் ஆய்வாளர்கள் மக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் மூலம் கிராமப்புற பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திவருகின்றனர். உயர்குடியில் பிறந்து, குடும்ப சூழ்நிலையை அனுசரித்து ஊரகபகுதிகளில் தங்கி பணியாற்றும் ஆய்வாளர்கள் சிறுகுறையும் இன்றி தங்கள் பணியை செய்துவருவது பாராட்டுக்குரியது ஆகும்.
ஆய்வாளர்கள் தெரிவித்தகருத்துகள் மூலம் ஊரகவளர்ச்சி திட்டத்தை மேலும் சிறப்பாக செய்யமுடியும் என்று நம்புகிறேன். ஆய்வை நிறைவுசெய்த இளம் ஆய்வாளர்கள் மேலும் ஒரு ஆண்டு ஊரக பகுதிகளில் தங்கி மக்களின் வளர்ச்சிக்கு சேவை ஆற்ற வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் பேசினார்.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.