மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பா.ஜனதா கூட்டணிகுறித்து தலைமையில் இருந்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. மற்ற எந்தகட்சியும் கூட்டணி குறித்து முழுமையான அறிவிப்பு எதுவும் வெளியிட வில்லை. பா.ஜ.க அரசியல் சூழ்நிலைகளை ஒட்டு மொத்தமாக ஆய்வுசெய்து தகுந்தநேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம். போலி வாக்காளர்கள் லட்சக் கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனார். பல்வேறு பத்திரிக்கைகளில் ஒருவரே பல அடையாள அட்டைகள் வைத்துள்ளது குறித்து செய்திவந்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஒரு போலியான வாக்காளர்கூட சேர்க்கப்படவில்லை என உறுதிப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல பலர் ஏற்கனவே உள்ள வாக்களிக்கும் இடத்தில் இருந்து முகவரி மாற்றப்பட்டு சிதறடிக்கப் பட்டுள்ளனர். அது சரி செய்யப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையம் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது. இது வரவேற்கப் படக்கூடிய விஷயம். இது வெறும் வாக்குறுதியாக இல்லாமல், உறுதியான நடவடிக்கை எடுக்ககூடிய வாக்குறுதியாக அமைய வேண்டும்.
கும்பகோணம் மகா மகத்திற்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளனர். அதை அரசுவிழாவாக அறிவிக்க வேண்டும் என்பது நியாயமானதல்ல. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் நினைவில் வைத்துக்கொண்டு கொண்டு வருவது இந்தமகாமகம். வரக்கூடிய பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் அரசு கவனம் செலுத்தவேண்டும்.
ஏற்கனவே நடந்த நிகழ்வையும், கடந்தகால அனுபவங்களையும், கருத்தில்கொண்டு ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படா வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம்செலுத்த வேண்டும். ஒரே நாளில் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட வட மாநிலங்களில் நடந்த கும்பமேளாவில் ஒருவருக்கும் சிறுகாயம் கூட இல்லாமல் அந்தந்த மாநில அரசு நடத்தியுள்ளது.
அதை விட சிறப்பாக கும்பகோணம் மகாமகத்தை தமிழக அரசு நடத்தவேண்டும். எனவே, இதில் தமிழக முதல்வர் கவனம் செலுத்துவார் என நம்பிக்கை உள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.,வில் இணைந்து வருகிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதா கட்சி நிலையாக கட்சியாக உருவெடுத்து வருகிறது. இனி வரும் காலங்களில் எந்தகூட்டணியும் இல்லாமல் தனிப் பெரும் கட்சியாக உருவாகி பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் இவ்வாறு அவர் கூறினார்.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.