இந்தியாவில் தூய்மை நகரங்கள் பட்டியலை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று வெளியிட்டார். மைசூருக்கு முதல் இடம் கிடைத் துள்ளது. இதில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகத் திலிருந்து இடம் பெற்ற ஒரேமாவட்டம் திருச்சி மட்டுமே. மதுரை 34-வது இடத்திலும், சென்னை-36-வது இடத்தையும் பெற்றுள்ளது.
முதல் 10 இடங்களை பிடித்த நகரங்களின் விவரம்வருமாறு:- 1. மைசூர், 2. சண்டிகார், 3. திருச்சி, 4. டெல்லி, 5. விசாகப் பட்டிணம், 6. சூரத், 7. ராஜ்கோட், 8. கேங்டாக் (சிக்கிம்), 9. பிம்ப்ரி சிந்து வாத் (மகாராஷ்டிரா), 10. மும்பை. இந்தப் பட்டியலில், மதுரை 34-வது இடத்தையும், சென்னை 36-வது இடத்தையும் பிடித்து ள்ளது. இந்தியாவை 5 ஆண்டுகளில் தூய்மைப் படுத்தி ‘தூய்மையான இந்தியா’ என்னும் நிலையை ஏற்படுத்து வதற்கான திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2014 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி ”தூய்மை இந்தியா” திட்டம் துவக்கப் பட்டது. இந்த திட்டத்தின் தூதர்களாக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகர்கள் சல்மான்கான், கமல் ஹாசன், பிரியங்கா சோப்ரா தொழில் அதிபர் அனில் அம்பானி உட்பட மேலும் சிலபிரபலங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.இதன்தொடர்ச்சியாக, தூய்மையான நகரங்கள் குறித்த ஆய்வை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நடத்தி தர வரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. முதல் முறையாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.