விவசாயிகளுக்கு 9 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த 2016-17ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும். விவ சாயிகளுக்கு 9 லட்சம் கடன் உதவி வழங்கப்படும். உரமானியம் நேரடியாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட சலுகைகளையும் அருண் ஜெட்லி அறிவித்தார்.

புகையிலை மீதான வரி 10லிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சொகுசு கார்களுக்கான வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2016-2017ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்வதற்காக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மக்களவைக்கு வந்தார். முன்னதாக மத்திய பட்ஜெட்டிற்கு பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

பின்னர் மக்களவையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். மக்களவையில் இன்று காலை 2016–17 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

உலக பொருளாதாரம் கடும் சிக்கல்களை சந்தித்துள்ள போதிலும் இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் உறுதியாக உள்ளது. கடினமானவைகளையும் சவால்களையும் நாம் வாய்ப்புகளாக மாற்றியிருக்கிறோம்.

*கடந்த 3 ஆண்டுகளில் 9.4 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 5.5 சதவீதமாக குறைந்து இருக்கிறது.
*நாடு முழுவதும்3 ஆயிரம் பொது மருந்து கடைகள் திறக்கப்படும்
*சிறு தொழில் முனைவோர் துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

*உயர் கல்விக்காக ரூ. 1000 கோடியில் நிதியம் அமைக்கப்படும்.
*நிதி மோசடியை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்
*வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 1 கோடியே 50 லட்சம் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும். இதற்காக 2000 கோடி ரூபாய் செலவிடப்படும்.

*3 வருடத்தில் 5 லட்சம் ஏக்கரில் .இயற்கை விவசாயம் செய்யப்படும்.
வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கர் பிறந்த நாளில் தொடங்கப்படும்.
*அன்னிய செலாவணி கையிருப்பு 350 பில்லியன் டாலராக உயர்வு ஷாப்பிங் மால்களைப் போல் சிறுக டைகளும் வாரம் முழுவதும் செயல்பட அனுமதிக்கப்படும்.

*நிலத்தடி நீர் அபிவிருத்திக்கு ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
*உயர் கல்விக்காக நிதி உதவி செய்ய ரூ 1000 கோடி செலவில் தனி அமைப்பு
*இந்த ஆண்டு ரூ. 9 லட்சம் கோடி விவசாய கடன் தர இலக்குவர்த்தக ரீதியலான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
*ஆழ்கடல் எரிவாயு திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கப்படும்.இயற்கை வேளாண்மைக்கு ரூ. 412 கோடிவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும். விவ சாயிகளுக்கு 9 லட்சம் கடன் உதவி வழங்கப்படும். உரமானியம் நேரடியாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட சலுகைகளையும் அருண் ஜெட்லி அறிவித்தார்.

* பிரதான் மந்திரி கிரிஷி சிசாய் யோஜனா என்ற வேளாண் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 285 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
* வங்கி திவால் சட்டம் சீரமைக்கப்படும்.
துறைமுகங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றப்பட்டு மெகா மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.*ஆதார் அட்டை அடிப்படையில் பயனாளிகளுக்கு பலன்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* பயீர் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ. 5500 கோடி ஒதுக்கப்படும்.

* மாநில அரசுகளுடன் இணைந்து 160 விமான நிலையங்கள் அமைக்கப்படும்
* நாடு முழுவதும் 1500 பன்முக திறன் வளர்ப்பு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்
* பத்தாம் வகுப்பு சான்றிதழ்களை மின்னணு முறையில் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்படும்.
* 2.23 லட்சம் கிலோ மீட்டருக்கு முக்கிய சாலைகள் இணைக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 100 கி.மீ. தொலைவுக்க சாலைகள் போடப்படும்.
* முதல் தடவையாக ரூ.35 லட்சம் கடன் பெற்று ரூ. 50 லட்சத்திற்கு மிகாமல் வீடு வாங்குவோருக்கு வட்டியில் ரூ. 50 ஆயிரம் சலுகை வழங்கப்படும்.

* விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் பருப்பு வகைளை இருப்பில் வைப்பதற்காக ரூ.900 கோடி ஒதுக்கப்படும்.
* ரூ10 லட்சத்திற்கு அதிக விலை கொண்ட கார்கள் மீது ஒரு சதவீத கூடுதல் “வரி

ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்குமேல் வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி
* வருமான வரி விதிப்பதற்கான உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. எஸ்யுஎஸ் சொகுசு கார் மீது 4% வரி விதிப்பு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...