புவிஈர்ப்பு அலைகளை பற்றி ஆராய்ச்சிசெய்ய ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இந்தியாவில் தொடங்கப் படும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
இந்த ஆராய்ச்சி நிறுவனமானது உலகிலேயே மூன்றா வதாக அமையப்போகும் ஆராய்ச்சி நிறுவனம் என்று பிரதமர் தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மான்கி பாத்’ நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் மற்றும் லூசியானா மாகாணங்களில் இதுபோன்ற ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கெனவே உள்ளது. சமீபத்தில் புவி ஈர்ப்பு காந்த அலைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது அறிவியல் ஆராய்ச்சியில் முக்கியமான மைல் கல்லாக கருதப்பட்டது.
இந்த ஆராய்ச்சியில் இந்தியாவை சார்ந்த விஞ்ஞானிகளின் பங்கும் முக்கிய மானதாகும். இதனை கருத்தில் கொண்டுதான் இந்தியாவில் ‘லேசர் இண்டர்ஃபெரோ மீட்டர் புவி ஈர்ப்பு அலைகள்’ பற்றிய ஆராய்ச்சி நி்றுவனம் அமைக்க திட்டமிட பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவில் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.