முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை காலையில் தொடங்கியது. அப்போது, ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசின் கருத்தைக் கேட்டு தமிழக அரசு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து குரல் எழுப்பினர்.
மக்களவைத் தலைவர் அனுமதி: இந்த விஷயத்தை கேள்வி நேரம் முடிந்ததும், அதிமுக உறுப்பினர்கள் எழுப்ப அனுமதிப்பதாக மக்களவைத் தலைவர் கூறினார். ஆனால், அதற்கு காங்கிரஸ் குழுத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்ட உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
"முன்னாள் பிரதமரைப் படுகொலையை செய்தவர்களை விடுதலைசெய்ய ஒரு மாநில அரசு கோருகிறது. இது தொடர்பான விவாதத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது' என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். இதனால் அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தவிவாதத்துக்கு கேள்வி நேரம் முடிந்ததும் அனுமதி அளிக்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் தெரிவித்தார்.
பரிசீலனை: இதன்படி கேள்விநேரம் முடிந்ததும் ராஜீவ் கொலையாளிகள் விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் பிரச்னை எழுப்பினர். இதை யடுத்து, அவையில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், "கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அனுப்பியகடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புதன்கிழமை வந்தது. அதை பரிசீலித்து வருகிறோம். குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே ஒருதீர்ப்பை அளித்துள்ளது. அந்தத் தீர்ப்பின் அம்சங்களையும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பொறுப்புடன், தார்மிக பொறுப்பையும் கவனத்தில் கொண்டு தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும்' என்றார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.