குஜராத்தில் இஷ்ரத்ஜகான் உள்பட 4 பேர் போலி என்கவுன்டரில் கொல்லப் பட்டதாக கூறப்படும் வழக்கில் மாயமான ஆவணங்களை கண்டுபிடிக்க தனிகுழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.
குஜராத் மாநிலம் அமதாபாத் அருகே, கடந்த 2004-ம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடியை கொல்லவந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி இஷ்ரத்ஜகான் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், அது போலி என்கவுன்டர் என்றும், அப்பாவியான அவர்களை போலீசார் பிடித்துவைத்து திட்டமிட்டு சுட்டு கொன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு தொடர்பான சிலஆவணங்கள் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாயமான ஆவணங்களை கண்டுபிடிக்க உயர் மட்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்.
கூடுதல் செயலர் (உள்துறை) பீ.கே. பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூன்றுபேர் குழுவானது இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கில் மாயமான ஆவணங்களை விசாரணை நடத்தி கண்டு பிடிக்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளர்.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.