மத்திய அரசின் வளர்ச்சி பணிகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள் என பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
எதிர்க் கட்சிகள் எழுப்பும் தேவையற்ற பிரச்னைகளில் பாஜக.,வினர் கவனம்செலுத்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தில்லியில் நடைபெற்று வந்த பா.ஜ.க இரண்டு நாள் தேசியசெயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. கட்சியின் தேசியத்தலைவர் அமித்ஷா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அரசியல்ரீதியான சில தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தேசிய செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்தநிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். இந்நிலையில், இரண்டாம் நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
எதிர்க்கட்சிகள் சில அர்த்தமற்ற விவகாரங்களை அரசுக்கு எதிராக எழுப்பிவருகின்றன. நமது கவனத்தை அத்தகைய சர்ச்சைக்குரிய விஷயங்களின் பக்கம் திருப்ப அவர்கள் முயலு கின்றனர்.
மத்திய அரசு மேற்கொண்டுவரும் வளர்ச்சி பணிகளை மக்களிடத்தில் விவாதிப்பதை தடுப்பதற்கான முயற்சி அதுவாகும். எனவே, எதிர்க் கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை நாம் கவனத்தில் கொள்ளக்கூடாது.
வளர்ச்சி ஒன்றே நமது தாரகமந்திரம். நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஒரேதீர்வு வளர்ச்சி மட்டுமே. ஆகவே, அதற்கான பாதையில் நாம் பயணிக்கவேண்டும். மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நாட்டின் வளர்ச்சி துரிதமடை ந்துள்ளது.
மத்திய அரசும், பாஜகவும் தோளோடுதோள் நின்று செயல்படுகின்றன. மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து மக்களிடத்தில் விழிப் புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
பாஜக அமைப்புரீதியாக வலுவடைந்துள்ளது. அதேவேளையில், கட்சி தொண்டர்களின் திறனை மேம்படுத்துவதும் அவசியம். மத்திய அரசின் கனவுத்திட்டங்களான "தூய்மை இந்தியா', "பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் – பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம்' உள்ளிட்ட திட்டங்களைச் செயல் படுத்துவதில் பாஜக தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.