வடகிழக்கு பகுதியை வர்த்தக கேந்திரமாக உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வடகிழக்கு பகுதியை வர்த்தக கேந்திரமாக உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
 

அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை உருவாக்கப்பட்டு 180 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மேகாலயா தலை நகர் ஷில்லாங்கில் உள்ள அந்தப்படையின் தலைமையகத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இருநாள்கள் விழா நடைபெற்றது.


 அதில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:


 இந்தியா சுதந்திரம்பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் வடக்கு கிழக்கு பகுதிகள் அடையவேண்டிய வளர்ச்சி, இதுவரை ஏற்படவில்லை. வடகிழக்குப் பகுதிகளின் அதிவேக வளர்ச்சிக்கே எங்கள் அரசு முன்னுரிமை அளிக்கிறது.
 எந்தவொரு பகுதியும் வளர்ச்சி யடைய வேண்டுமெனில், போக்குவரத்துவசதி என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். இதனால்மட்டுமே தொடர்புகள் மேம்படுத்தப்பட்டு எல்லை தாண்டிய வர்த்தகம் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.


 தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தக தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வடகிழக்கு பகுதியை வர்த்தக கேந்திரமாக உருவாக்க வேண்டும். அதற்கு அப்பகுதிகளில் அமைதி நிலவவேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.
 

இந்தியா- மியான்மர் எல்லையில் கடந்தகாலங்களில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைகள் மிகவும் சிறப்பாக பணியாற்றியது போல், தற்போது வடகிழக்குப் பகுதிகளில் அமைதியை உறுதிப்படுத்தவும் முக்கிய பங்காற்ற வேண்டும்.


கொடூர செயல்கள் மூலம் இந்தியாவை சீர்குலைக்க பல்வேறு தீய சக்திகள் முயற்சித்து வருகின்றன. அவர்களின் செயல்களை நமது ராணுவப்படைகள் முறியடித்து வருகின்றன. அதைப்போல, வடகிழக்கு பகுதிகளில் செயல்படும் தீய சக்திகளை அஸ்ஸாம் படைகளாகிய நீங்கள் வீழ்த்த வேண்டும்.


 வன்முறையை கைவிட எண்ணும் பயங்கரவாத அமைப்புகளுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளது. எனவே யாரும் வன்முறையை கையில் எடுக்கவேண்டாம் என்பதே என் வேண்டுகோள் .  அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவுகளில் பெண்களை பணியமர்த்தும் முயற்சியைத் தொடங்கியது பாராட்டுக்குரியது என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...