இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, நாட்டின் விடுதலைக்காக மிகப் பெரிய படையை உருவாக்கி உலக புகழ்பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1948–ம் ஆண்டு அவர் விமானவிபத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையே அவர் விமானவிபத்துக்கு பிறகு உயிருடன் இருந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவரது மரணம்குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியானதால் அவரைப்பற்றிய உண்மை தகவல் என்ன? என்பதில் மர்மம் நீடிக்கிறது.
நேதாஜியின் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்க அனைத்து ஆவணங்களையும் வெளியிட மத்திய அரசு முடிவுசெய்தது. அதன்படி, நேதாஜியின் 119-வது பிறந்த நாளான 23-1-2016 அன்று அவர் தொடர்பான 100 ரகசியகோப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அந்தகோப்புகளில் இதுவரை பொதுவெளியில் தெரியாமல் இருந்த பல அரியதகவல்கள் காணப்பட்டன.
இந்நிலையில் மத்திய மந்திரி மகேஷ்சர்மா இன்று நேதாஜி தொடர்பான மேலும் 50 ஆவணங்களை வெளியிட்டார். இந்த 50 ஆவணங்களில் 10 பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், 10 ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தில் இருந்தும், மீதமுள்ள 30 ஆவணங்கள் வெளியுறவு அமைச்சகத் திடமிருந்தும் பெறப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.