வங்கதேச ஊடுருவலை தடுக்க காங்கிரஸ் அரசு தவறி விட்டது என்று அமித்ஷா குற்றம்சாட்டினார். அசாம் மாநிலம் தாகுவாகோனாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பேசியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் பிரச்சாரத்துக்காக இங்கு வர உள்ளனர். அப்போது, வங்கதேச ஊடுருவலை தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று அவர்களால் சொல்லமுடியுமா? முடியாது. ஏனென்றால், வங்கதேச ஊடுருவல் காரர்களை தங்களது வாக்கு வங்கியாக காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது.
அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்குவந்தால் வங்கதேச எல்லையை மூடுவோம். இதன்மூலம் வங்க தேசத்தினரின் ஊடுருவல் பிரச்சினை முடிவுக்குவரும். வங்கதேசத்தினரின் ஊடுருவல் அசாம் மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே பெரும்பிரச்சினையாக உள்ளது.
மேலும் சுதந்திரத்தின் போது அசாம் மாநிலத்தை இந்தியாவுடன் சேர்க்க நேரு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அசாம்மாநிலத்தை இந்தியாவின் அங்கமாக சேர்த்ததில் மகாத்மா காந்தியும் கோபிநாத் பர்தோலோவும் (அசாம் முதல் முதல்வர்) முக்கியபங்காற்றினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.