‘அடுத்த, 25 ஆண்டுகளுக்குள் பஞ்சாயத்து முதல், பார்லிமென்ட் வரை, அனைத்து இடங்களையும் பிடிப்போம்

 ''அடுத்த, 25 ஆண்டுகளுக்குள், நாட்டில் உள்ள பஞ்சாயத்து முதல், பார்லிமென்ட் வரை, அனைத்து இடங்களையும் பா.ஜ., பிடிக்கும்,'' என, சபதம் ஏற்கிறேன் . இதற்காக, தொண்டர்கள் உழைக்க வேண்டும் .

தேசப் பற்று நமதுகட்சியின் தனித்துவ அடையாளம். அதை நாம் மூன்று தலைமுறைகளாகக் கடைப்பிடித்து வருகிறோம். இப்போது இந்த அடையாளத்தை அடுத்த தலை முறைக்கும் அறிவுறுத்துவது நம் அனைவரின் கடமையாகும். 11 பேரால் தொடங்கப்பட்ட பாஜக, இப்போது 11 கோடி உறுப்பினர்களை கொண்ட நாட்டின் பேரியக்கமாக வளர்ந்துள்ளது.

 நாட்டின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு பதவியேற்றபிறகு, அவர் தனது மேற்கத்திய கொள்கைகளையும் சிந்தனைகளையும் செயல்படுத்த முனைந்தார். அதை எதிர்க்கும்விதமாக தேசிய நலன்சார்ந்த சக்திகள் ஒன்று சேர்ந்து "ஜன சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கின. நேருவின் பாதையில் நமது முன்னோர்கள் சென்றிருந்தால் நம்நாடு தவறான பாதையில் வழி நடத்தப் பட்டிருக்கும். நல்ல வேளையாக அந்தத்தவறை நமது முன்னோர்கள் செய்யவில்லை.

 நமக்கென ஓர் அடையாளத்தையும் பாதையையும் வகுத்துக்கொண்டு செயல்படுவதால் தான், உலகின் பல நாடுகளும், சாதாரண நிலையில் இருந்து மிகஉயரிய பதவிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை வியந்து பாராட்டுகின்றன. அந்தவகையில் உலகின் முன்னோடித் தலைவராக மோடி உருவாகியுள்ளார்.

 பல காலமாக காங்கிரஸின் பிடியில் இருந்து வந்த ஆட்சியில் இருந்து மக்களை விடுவித்து ஏழ்மை, வறுமை  பிணிகளை போக்க மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்துள்ளது. ஏழை, எளியமக்களின் நிலையை கவனத்தில்கொண்டு திட்டங்களை நிறைவேற்றும் அரசு மத்தியில் அமைந்துள்ளது. அதன் திட்டங்களையும் சிறப்புகளையும் மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டியது பாஜக தொண்டர்களின் கடமை'.

கட்சியின் நிறுவன நாள் விழாவில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...