திறன்மிகு இந்தியா திட்டத்தின் தூதராக கிரிக்கெட்வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட உள்ளார். இளைஞர்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்த தனக்கு கிடைத்த நல்லதொரு வாய்ப்பு என சச்சின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு பயிற்சிஅளிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதையடுத்து, ‘திறன்மிகு இந்தியா’ என்ற திட்டத்தை கடந்தாண்டு ஜூலை மாதம் 16ம் தேதியன்று பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார். 2022ம் ஆண்டுக்குள் 40 கோடி பேருக்கு தொழில்பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களை கவரும்வகையிலும் பிரபல கிரிக்கெட்வீரர் சச்சின் டெண்டுல்கரை இத்திட்டத்தின் தூதராக மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இது குறித்து திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், ‘‘நமதுகாலத்தில் வாழும் பிரபலங்களில் குறிப்பிடத்தக்க நபராக விளங்குபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்த சச்சினை தூதராக நியமிப்பதன்மூலம் இளைய சமுதாயத்துக்கு உந்து சக்தியாக இருக்கும்’’ என்றார்.
சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், ‘‘திறன்மிகு திட்டத்துக்காக என்னை தொடர்புகொண்டபோது மகிழ்ச்சி அடைந்தேன். இளைஞர்கள் அதிகளவில் உள்ள நாடு இந்தியா. இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பது முக்கியம். இளைஞர்கள் தங்களுடைய திறமைகளை அறிந்து அதை வாய்ப்பாக மாற்றிக்கொள்வது அவசியம். இதற்கு திறமை இந்தியாதிட்டம் கைகொடுக்கும். இளைய சமுதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த எனக்கு வாய்ப்புகிடைத்துள்ளது’’ என்றார்.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.