மதசார்பற்றகுழு மற்றும் சகிப்பின்மையால் பிரதமர் மோடி பாதிக்கப் பட்டுள்ளார் என்று மத்திய இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி அரசியல் மதசார்பற்ற குழு மற்றும் சகிப்பின்மை ஆகியவற்றினால் கடந்த 20 வருடங்களாக பாதிக்கப் பட்டுள்ளார். ஆனால், நாட்டில் அவர் மேற்கொண்டுவரும் வளர்ச்சிக்கான திட்டத்தினை அவை பாதிக்காது.
குஜராத்தின் முதல்வராக இருந்த பொழுது, முன்னேற்றத்திற்கான முகம் ஆக இருந்தமோடி, பிரதமராக ஏழைகள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்ற த்திற்காக உழைத்து வருகிறார்.
ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிரதமர் மோடி, அதிகாரவர்க்கத்தில் இருந்த தரகர்களை ஒழித்துள்ளார். முன்னேற்றத்தினை அடிப்படையாககொண்டு அவர் செயல்பட்டு வருவதை ஊழல்செய்து நாட்டை கொள்ளையடித்தவர்களால் ஜீரணித்துகொள்ள முடியவில்லை என நக்வி கூறியுள்ளார்.
உண்மையினை மறைத்து தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி முன்னேற்ற த்திற்கான வழியில் தடையினை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், நல்லநிர்வாகம் வழங்குதல் மற்றும் வளர்ச்சியை முடுக்கிவிடுதல் ஆகியவற்றில் அரசு முனைப்புடன் உள்ளது. முன்னேற்றத்திற்கான விசயங்கள் தொடர்ந்து பாதிக்கப் படாமல் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.