இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களின் செயல் பாடுகள் காணப்படுவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்டகேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்துப் பேசியதாவது:
நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப் பினரின் செயல்பாடுகள் தென்படுகின்றன. எனினும், இது நாட்டுக்கு அச்சுறுத்தலாக இல்லை. அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் துல்லியமாக கண்காணிகப்பட்டு வருகின்றன.
எனவே, நாட்டுக்கு எதிராக அவர்களால் ஒரு அடிகூட முன்னெடுத்து வைக்கமுடியாது. ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பாக தேசியபுலனாய்வு அமைப்பினரால் இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இது சம்பந்தமாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விசாரணை நடைமுறைகளை முடிப்பதற்கான காலவரையறையை அரசு நிர்ணயிக்கமுடியாது. அதே சமயத்தில், நிரபராதிகள் எவரும் தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என்றார் கிரண் ரிஜிஜூ.
முன்னதாக, இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், "இந்திய முஸ்லிம்கள் நம் நாட்டு கலாசாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளை அவர்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள்' என்றார்.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.