தமிழகத்தில் மத்திய அரசு செயல் படுத்த முயலும் பல நலத் திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்காமல் முட்டுக்கட்டைபோட்டார் என பாஜக தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
பட்டுக்கோட்டை, மதுரை, தென்காசி, நாகர்கோவில் ஆகியஇடங்களில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பாஜக தலைவர் அமித்ஷா பேசினார்.
அமித்ஷா பிரச்சாரப்பேச்சின் 10 முக்கிய அம்சங்கள்:
1. தமிழகத்தின் வளர்ச்சிக்கான அரசுவேண்டுமா அல்லது அதிமுக, திமுக போன்ற ஊழல் அரசுகள் வேண்டுமா என்பதை வாக்காளர்கள் சிந்தித்து இந்தத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதிமுக, திமுக இடையே எந்தவேறுபாடும் இல்லை. ‘அ’ என்ற ஒரு எழுத்தைத்தவிர. மற்றபடி, இருவரும் தமிழகத்தை போட்டி போட்டுச் சுரண்டியவர்கள்.
2. மத்தியில், 2014-ல் நடைபெற்றதேர்தலில், 30 ஆண்டுகளாக இந்த நாட்டைச் சுரண்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் தூக்கியெறியப்பட்டு, மோடி தலைமையிலான அரசு அமைந்தது. அதுபோன்ற தொடக்கம், தமிழகத்திலும் ஏற்பட வேண்டும். மீண்டும், மீண்டும் திமுக, அதிமுகவை தேர்ந்தெடுக்காமல், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவுகொடுங்கள். இங்கேயும் ஒரு மாற்றத்தை தொடங்கலாம்.
3. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸும், திமுகவும் சேர்ந்து ரூ.12 லட்சம்கோடி ஊழல் புரிந்துள்ளன. பூமிக்கு அடியில் நிலக்கரி ஊழல், ஆகாயத்தில் 2 ஜி ஊழல் என எவற்றையும் விட்டுவைக்க வில்லை. அதிமுகவின் தலைவியோ சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைசென்றவர். இவர்களுக்கு ஊழலைத்தவிர வேறு எதுவும் தெரியாது. திமுக, அதிமுக.,வால் தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை ஒரு போதும் கொடுக்க முடியாது.
4. நாடு முழுவதும் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் வித்தியாசமாக, குழந்தைகள் அருந்தும் பால்கொள்முதலிலும் கலப்படம் செய்து ஊழல் நடந்துள்ளது. இது, வருந்தத் தக்கது. ஆற்று மணலில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடியை அதிமுக அரசு கொள்ளை யடித்துள்ளது. மோடி ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப் பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு, துன்புறுத்தல் போன்றவை நடைபெறு வதில்லை.
5. சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது, மாநில அரசு தூங்கி கொண்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, உடனடியாக ரூ.2,000 கோடியை நிவாரணமாக வழங்கினார். ஆனால், அந்த நிதியை மீண்டும் வெள்ளபாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்தாமலும், ‘அம்மா’ பெயரில் அனைவருக்கும் தலா ரூ.5,000 வழங்கப் பட்டுள்ளது.
6. மத்தியில் 2 ஆண்டுகளாக பாஜக தலைமையில் ஊழலற்ற ஆட்சிநடைபெற்று வருகிறது. தேசத்தின் முன்னேற்றத்தை மட்டுமே மனதில்வைத்து பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். மோடி பிரதமரான பிறகு 2 ஆண்டுகளில், தமிழகமீனவர்கள் யாரும் இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப் படவில்லை. தேசத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி ஊழலின்றி செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
7. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டுவர முயற்சிசெய்து வருகிறார். அதற்கு தமிழக அரசு உரியஅனுமதி கொடுக்காமல் முட்டுக் கட்டை ஏற்படுத்தி வருகிறது.
8. ஏழை பெண்களுக்கு இலவச காஸ்சிலிண்டர், ரூ.180 கோடியில் கிராமப்புற சாலைமேம்பாடு, முத்ரா திட்டத்தில் இளைஞர்களுக்கு சுய தொழிலுக்கு நிதியுதவி, கரும்பு விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு என்று பல்வேறு மத்திய அரசு திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த ஜெயலலிதாவின் அரசு ஒத்துழைப்பு அளிக்க வில்லை. மீண்டும் அவருக்கு வாக்களித்தால் இதுபோன்ற பல்வேறு நல்ல திட்டங்களும் தமிழகத்துக்கு கிடைக்காமல் போய்விடும்.
9. 24 மணிநேரம் மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான உதய் ஜோதி திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு முன்வந்தது. இதற்கு ஜெயலலிதா அனுமதிக்க வில்லை. இதுபோல் மத்திய அரசின் பல நலத்திட்டங்களை தமிழக அரசு ஊழல்மூலம் வீணாக்கிவிட்டது. ஊழலற்ற ஆட்சியைவழங்க பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.
10. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஊழல் புரிந்துள்ளன. தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்ல ஒரே வழி பாரதிய ஜனதாவுக்கு வாக்களிப்பது மட்டும் தான்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.