பிரதமர் நரேந்திர மோடியின் பி.ஏ., எம்.ஏ. கல்விச் சான்றி தழ்களை பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று வெளியிட்டநிலையில், அந்த சான்று போலியானது என்று குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சி, அதுகுறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் கல்விதகுதி குறித்து சர்ச்சை கிளப்பிய ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச் சருமான அரவிந்த் கெஜ்ரிவால், " பிரதமர் மோடி எந்த வித பட்டப் படிப்பும் படிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. நாட்டுமக்கள் இது குறித்த உண்மையை அறிய விரும்பு கின்றனர். இப்படி யிருக்கையில், அவரது கல்வித் தகுதி குறித்த ஆவணபூர்வ தகவல்களை வெளியிடவேண்டும்" என மத்திய தகவல் ஆணையத்தை (சிஐசி) வலியுறுத் தியிருந்தார். இது புதிய சர்ச்சையை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக டெல்லியில் இன்று பத்திரிகை யாளர்களை சந்தித்த பா.ஜ.க தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர், டெல்லி பல்கலைக் கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இளங்கலை பயின்றதற்காக பெற்ற சான்றிதழையும், குஜராத் பல்கலைக் கழகத்தில் முதுகலை படித்ததற்காக பெற்ற சான்றிதழையும் காண்பித்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜெட்லி "நாட்டில் பொதுவிவாதங்கள் மிகவும் தரம் தாழ்ந்து வருகின்றன. அதற்கு எடுத்துக் காட்டுதான் பிரதமர் மோடி மீது ஆம் ஆத்மி கட்சியினர் முன்வைத்த அடிப்படை ஆதாரமற்ற குற்றச் சாட்டு. பிரதமரின் கல்வித் தகுதியை விளக்குவதற்காக ஒரு பொதுக் கூட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதற்கு வெட்கப்படுகிறேன். தங்களது கட்சி எம்எல்ஏ.க்கள் பலர் போலிச்சான்றிதழ் வழக்கில் சிக்கியுள்ளதை மறந்துவிட்டு பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச் சாட்டுகளை முன் வைக்கின்றனர்" என்றார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.