மாநில அரசுகளால் வழங்கபடும் மாற்றுத் திறனாளிகள் சான்றிதழை, நாடுமுழுவதும் பயன்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய அளவிலான ஆலோசனைக்கூட்டத்தில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:
தற்போதுள்ள சட்ட நடை முறையின்படி, ஒரு மாநில அரசால் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், மற்றொரு மாநிலத்தில் செல்லாது. இதனால், பணியிடமாற்றம், திருமணம் உள்ளிட்ட காரணங்களால் மாற்றுத் திறனாளிகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லநேர்ந்தால், அங்கு அரசின் சலுகைகளை தொடர்ந்துபெறுவதில் அவர்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடுகிறது.
இந்தப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், மாநில அரசுகளால் ஒருமுறை வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், நாடுமுழுவதும் அல்லது அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் செல்லத்தக்க வகையில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான 2014-ம் ஆண்டு சட்டத்தில் புதியபிரிவு விரைவில் சேர்க்கப்பட உள்ளது. இதற்கான சட்ட முன்வரைவு பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் பெயர், முகவரி, அலைபேசி எண், வங்கிக்கணக்கு விவரம், உடலுறுப்பு பாதிப்பின் வகை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நவீன அடையாள அட்டை வழங்கும்திட்டம், மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லாம் மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்பு, மாற்றுத்திறனாளிகள் குறித்த அனைத்து விவரங்களையும் நாம் இணையம்வழியாகவே தெரிந்து கொள்ளலாம் என்று அமைச்சர் கெலாட் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப்பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான சட்ட விதிமுறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.