பிரதமர் நரேந்திரமோடிக்கு மாற்றாக நாட்டில் வேறு எந்தத்தலைவர்களும் இல்லை என மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்யநாயுடு தெரிவித்தார்.
ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளரிடம் பேசிய அவரிடம், பாஜக அல்லாதகட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கும் பிகார் முதல்வரும், ஐ.ஜனதா தலைவருமான நிதீஷ்குமார், 2019ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தலில், பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவராக உருவெடுப்பாரா? எனக் கேட்கப்பட்டதற்கு, பாஜகவுக்கு மாற்றாக புதியஅணியை ஏற்படுத்தும் முயற்சிகள் அனைத்தும், முரண்பாடுகளால் தோல்வியில் தான் முடிந்துள்ளன.
மோடிக்கு மாற்று வேறுயாரும் இல்லை. ஆனால், அப்படி ஒரு மாற்று சக்தி இருப்பதாக அவர்கள் பேசுகின்றனர். பிரதமராக வேண்டும் என்ற அபிலாஷையுடன் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால், அந்தப்பதவி காலியில்லை. இரண்டாவது, இந்த கூட்டணிகள் அனைத்தும் முரண்பாடுகளை கொண்டவை ஆகும்.
மத்தியில் ஆளும் தேசியஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக நிதீஷ் குமாரால் முன்வைக்கப்பட்ட கூட்டாட்சிக் கூட்டணியானது, ஏற்கெனவே முயற்சிக்கப்பட்ட, பரிசோதனை நடத்தப்பட்ட, தோல்வி யடைந்த கூட்டணியாகும்.
முதலாவதாக, பிகாரில் தற்போது என்ன நடக்கிறது என்பது நமக்குத்தெரியும். அந்த மாநிலம் மீண்டும் காட்டாட்சியின் கீழ் தள்ளப்பட்டுவிட்டது. மாநிலத்தில் எங்குபார்த்தாலும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு, பிகாருக்கு வெளியே செல்வாக்குகிடையாது.
இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி முன்பு ஆதிக்கம்செலுத்தியது. தற்போது அந்த இடத்தை பாஜக பிடித்துள்ளது. பாஜக தேசியவாதிகள் கொண்டகட்சி மட்டுமல்ல; தற்போது உண்மையான தேசியக் கட்சியாக மாறியுள்ளது.
ஆம் ஆத்மி தில்லியில் ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சியினர் தில்லிக்கு முழுமாநில அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தை எழுப்புகின்றனர். காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது ஏன் தில்லிக்கு முழுமாநில அந்தஸ்து அளிக்கவில்லை? என்றார் வெங்கய்ய நாயுடு.
Leave a Reply
You must be logged in to post a comment.