பிரதமர் நரேந்திரமோடி தனது ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று இரண்டு நாள் பயணமாக கத்தார் சென்றார்.
அங்கு அவருக்கு சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் அவர் நேற்று உரையாற்றினார். அந்நாட்டு பிரதமர் ஷேக்அப்துல்லா பின் நசீர் அல் தானியையும் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து, இன்று, தோஹாவில் அந்நாட்டு தொழிலதி பர்களுடன் நடக்கும் வட்டமேஜை மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார்.
கத்தாரில் வரும் 2022-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் "ஃபிஃபா' உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான கட்டுமானப்பணிகளில் ஏராளமான இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பாக பிரதமர் மோடி, சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "தோஹாவை அடைந்து விட்டேன். இந்தியா – கத்தார் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் எனது இந்தப்பயணம் அமையும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.