பிரதமர் நரேந்திரமோடி சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணம் முடிந்த கையோடு, அங்கிருந்து, அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
சர்வதேச சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளுக்கு சென்று, பல்வேறு வர்த்தகப்புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதையடுத்து, சுவிட்சர்லாந்து சென்ற அவருக்கு, சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டு அதிபர் மற்றும் தொழிலதிபர்களையும் சந்தித்துப்பேசிய மோடி, இந்தியாவில் முதலீடுசெய்ய முன்வரும்படி அழைப்புவிடுத்தார்.
இதேபோன்று, ஐநா பாதுகாப்புசபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியா வருவதற்கு, ஆதரவு அளிப்பதாக, சுவிட்சர்லாந்து அதிபர் உறுதியளித்தார். இதன்பிறகு, சுவிட்சர் லாந்தில் இருந்து அமெரிக்கா கிளம்பினார்.
மோடி இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவை, வெள்ளை மாளிகையில் உள்ள அவரது அதிகாரப் பூர்வ அலுவலகத்தில் சந்தித்துப்பேச உள்ளார். இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு, அணுசக்திப்பயன்பாடு தொடர்பான ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் இருதலைவர்களும் விரிவாக பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.
மேலும் பருவநிலை மாற்றம், சுற்று சூழல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் ஒபாமாவுடன் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் மோடிக்கு மதியவிருந்து அளிக்கிறார் ஒபாமா.
மோடி தனது அமெரிக்க பயணத்தின் முக்கியநிகழ்வாக, அமெரிக்க நாடாளுமன்ற இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில், நாளை உரையாற்றுகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.