டெல்லி மேல்சபையில் 57 உறுப்பினர் களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் 30 உறுப்பினர்கள் போட்டியின்றி ஒருமனதாக கடந்த 3–ந் தேதி தேர்வுபெற்றனர்.
பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணிக்கு 11 உறுப்பினர்களும் (பா.ஜனதா 7, தெலுங்கு தேசம் 2, சிவசேனா 1, ஷிரோன்மணி அகாலி தளம் 1) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணிக்கு 5 உறுப்பினர்களும் (காங்கிரஸ் 4, தேசியவாத காங்கிரஸ் 1) கிடைத்தன.
மேலும் 13 உறுப்பினர்களும் (அ.தி.மு.க. 4, பிஜு ஜனதா தளம் 3, தி.மு.க. 2, ஐக்கிய ஜனதாதளம் 2, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 2.) ஒருமனதாக தேர்வுபெற்றனர்.
மீதியுள்ள 27 எம்.பி.க் களுக்கான டெல்லி மேல்-சபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பா.ஜனதா 12 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் கைப்பற்றின. மீதியுள்ள 9 இடங்களை மாநிலகட்சிகள் (சமாஜ்வாடி 7, பகுஜன் சமாஜ் 2) கைப்பற்றின.
டெல்லி மேல்–சபை தேர்தல்முடிவு மூலம் பா.ஜனதாவின் பலம் அதிகரித்து உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 5 எம்.பி.க்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. இதனால் அந்த கட்சி மேல்சபையில் முன்னிலையில் இருக்கிறது.
டெல்லி மேல்சபையில் மொத்த இடம் 245 ஆகும். இதில் பா.ஜனதா தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணிக்கு 74 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரசின் ஐக்கியமுற்போக்கு கூட்டணிக்கு 71 உறுப்பினர்கள் உள்ளனர் காங்கிரசைவிட பா.ஜனதாவுக்கு கூடுதலாக 3 உறுப்பினர்கள் உள்ளனர்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.