வருமானவரி செலுத்துவோர் எண்ணிக்கையை 10 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை

வருமானவரி செலுத்துவோர் எண்ணிக்கையை 10 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி இலக்கு நிர்ணயித் துள்ளார்.

வருமான வரித்துறை நிர்வாகிகளுக்கான 2 நாள் வருடாந்திர கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

வருமான வரித்துறை நிர்வாகத்தின் அடித்தளமானது வருவாய், பொறுப்பு, நேர்மை, தகவல், கணினிமய மாக்கம் ஆகிய 5 தூண்களைக் கொண்டதாக இருக்கவேண்டும்.

அனைத்து குடிமக்கள் மத்தியிலும், வருமான வரிச் சட்டத்தை மதிக்கவேண்டும் என்ற எண் ணத்தை உருவாக்க வேண்டும். அதேநேரம் வரிஏய்ப்பு செய் தால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தவேண்டும். பொதுமக்களும் வருமான வரித்துறை அதிகாரிகளைப் பார்த்து அச்சப்படக்கூடாது.

இந்தியர்கள் இயற்கையாகவே நேர்மையானவர்கள். வரியை செலுத்துவதில் அவர்களுக்கு தயக்கம்இல்லை. ஆனால் இதில் அவர்களுக்கு சிலபிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினையை அதிகாரிகள் புரிந்துகொண்டு அதற்கான தீர்வை கண்டுபிடிக்கவேண்டும்.

வரிமானவரி வசூல் இலக்கை எட்டுவதற்காக, வரி செலுத்துவோருக்கும் வருமான வரித்துறைக்கும் இடையே அதிகாரிகள் நம்பிக்கை பாலம் அமைக்கவேண்டும். பொதுமக்களிடம் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்ளாமல் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும். அனை வரையும் வரி ஏய்ப்பாளர்களைப் போல கருதக்கூடாது.

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை இப்போது 5.43 கோடியாக உள்ளது. இதை இருமடங்காக (10 கோடி) அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கணக்கில் காட்டாத வருமானத்தை (கருப்பு பணம்) சிலர் பதுக்கி வைத்துள்ளனர். இவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் நட்பு ரீதியாக அணுகினால், அந்தப்பணத்துக்கான வரி தானாக அரசுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மற்றும் வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...