போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிபெறும் பிற்படுத்தப்பட்ட (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மாணவர்களுக்கு பயிற்சிக்காலத்தில் ஆகும் முழுச்செலவையும் மத்திய அரசே இனி ஏற்க முடிவுசெய்துள்ளது.
முன்பு, எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்த மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் பங்கேற்பதற்காக பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வதற்கு ரூ.20,000 உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வந்தது.
இந்நிலையில், இந்தப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சிக்காலத்தில் ஆகும் மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கும்வகையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம், அண்மையில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் உயரதிகாரி, தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை கூறியதாவது:
எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்த மாணவர்கள் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. இதற்கு பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து மாணவர்கள் பயிற்சிபெறுகின்றனர். இனி, பயிற்சிக் காலத்தில் ஆகும் மொத்தசெலவையும் மத்திய அரசே ஏற்கும். மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளிக்க புகழ் பெற்ற பயிற்சி நிறுவனங்கள் அட்டவணைப் படுத்தப்பட்டு வருகின்றன.
மாநில அரசுகளும், யூனியன்பிரதேச அரசுகளும் மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி அளிக்க சிறந்தபயிற்சி நிறுவனங்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். குடும்பத்தினரின் ஒட்டுமொத்த ஆண்டுவருவாய் ரூ.6 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், இந்தத் திட்டத்தின் கீழ் எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பலன்பெற முடியும்.
Leave a Reply
You must be logged in to post a comment.