உலக நாடுகள் கொண்டாடும் யோகா

இன்றைய உலகம் பரபரக் கிறது. எதிலும் வேகம், எங்கும் அவசரம். அனை வரிடமும், பல்வேறு நெருக்கடிகளை கடந்து சாதிக்கவேண்டும் என்கிற உத்வேகம். ஆசைப்பட்டதை அடைய முடியும், எட்டாதது எதுவும் இல்லை என்கிற எண்ணமும் பரவிவருகிறது.

எனினும், மனிதர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா? என்றால் அது மிகப் பெரிய கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.

 பண்டைய மனிதர்கள் அண்டை நாடுகளு டனான போர் நெருக்கடியால் மட்டுமே அச்சத்துடன் வாழ்ந்தனர். அவர்களுக்கு இயற்கையாலோ, விலங்கு களாலோ எந்த பேராபத்தும் இல்லை. உடல், மன நலத்துடன் நிம்மதியாக வாழ்ந்தனர். வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்தனர். அந்தமகிழ்ச்சி இன்று நம்மிடையே இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். இதற்கு என்ன காரணம்?

நமது பாரம்பரிய வாழ்க்கை முறையை மறந்து போனதுதான் காரணம் என்கின்றனர், சான்றோர்கள். அந்த மன அமைதியை, மகிழ்ச்சியை முழுமையாக யோகா கலையில் பெறலாம், சாதனையும் புரியலாம் என்பது அவர்களின் வழி முறை.

சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பதஞ்சலி முனிவர் தான் யோகா கலையின் சூத்ரதாரி. எனவே யோகாவின் தாயகம் இந்தியா தான் என்பதை அறுதியிட்டு நம்மால் கூற முடியும். பதஞ்சலி முனிவர் எழுதிய யோக சூத்ராவில் மனஅமைதிக்கு தேவையான யோக நிலைகளை வரிசைப்படுத்துகிறார். அதுதான் இன்று உலகம் பூராவும் விரவிநிற்கிறது. அனைத்து தலை முறைகளையும் ஈர்க்கிறது.  

அண்மைக்காலமாக யோகாவின் புகழ் கடல்கடந்து வேகமாக பரவி வருகிறது. வயது, மதம், சாதி, பாலினத்துக்கு அப்பாற்பட்ட சக்தியாக யோகா திகழ்கிறது. அதனுடன் இணைந்த சுவாசப் பயிற்சி, தியான நுணுக்கங்கள் இன்று 200 நாடுகளில் பின்பற்றப் படுகிறது.

2014–ல் பிரதமராக மோடி பதவியேற்ற பின்பு யோகாவை உலக அளவில் உச்சம்பெற வைத்தார். அவருடைய இடைவிடாத முயற்சியால் ஐ.நா. சார்பில் உலக நாடுகள் கொண்டாடும் ஒரு தினமாக அங்கீகாரமும் கிடைத்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகாதினமாக பின்பற்றப்படும் என்ற அறிவிப்பை கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11–ந்தேதி ஐ.நா. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு யோகாவை உலக நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்துவிட்டது.

 முதல் சர்வதேச யோகா தினம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21–ந்தேதி கடைபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து யோகா பயிற்சிகளை மேற்கொள் கிறவர்களிடம் நோய் அண்டாது, யோகாவில் குணம் அடையாத நோய்களே இல்லை என்பது அறிவியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட உண்மை. அது மட்டுமல்ல, மூப்பை தள்ளிப் போடும், இளமை தோற்றத்தை அளிக்கும் மாபெரும் சக்தி யோகாவுக்குமட்டுமே உண்டு என்பதும் நிஜம்.

யோகாவின் பெருமையை உணர்த்தவே நமது முன்னோர்கள், புராணங்களிலும், சிற்ப சாஸ்திரங்களிலும் இறைவனை யோகாசன நிலைகளிலும், கைகளை முத்திரையிலும், கண்களை தியான நிலையிலும் வைத்தனர்.

ஒருவரின் யோகப் பயிற்சி எதை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளதோ, அவர்களின் தேடுதலுக்கு ஏற்ப, அறிவியல் பயன்களும் ஆன்மிக பயன்களும் கிடைக்கின்றன.

யோகம் என்பது பல பொக்கிஷங்களை தன்னுள் அடக்கிய மாபெரும் கடல் போன்றது. யார் எந்த பாத்திரத்தை கொண்டு தண்ணீரை அள்ளுகிறார்களோ, அதற்கேற்ப பலனைத் தரும் அட்சய பாத்திரம்.

பதஞ்சலி முனிவர் வகுத்த யோக சூத்திரத்திலும், அஷ்டாங்க யோகத்திலும், சமூக ஒழுக்கம், சுய ஒழுக்கம் ஆகியவற்றில் முதல் 2 படிகளாக இயமம், நியமம் ஆகிய 10 ஒழுக்க நெறி முறைகளை குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுபற்றி யோகா நிபுணர் ஜி.டி. அன்பரசன் கூறுவதில் இருந்து….

 இயமம் என்பது எந்த உயிரையும், கொல்லாமலும், துன்புறுத்தாமலும் இருப்பது, பிறர் பொருளைத் திருடாமல் இருப்பது, மனதாலும், செயலாலும் பிரம்மச்சாரியம் காப்பது, பிறர் பொருள் மீது பேராசை கொள்ளாமல் இருப்பதும் ஆகும்.

இதை அறிவியல் பூர்வமாக, ஆன்மிக ரீதியாகவும் நோக்கும்போது, தனி மனிதன் யோகப் பயிற்சியை முறையாக செய்து வரும்போது, சமூகத்தில் ஒழுக்கம் மிகுந்தவர்கள் உருவாகுவார்கள். மேலும் சமூக வன்முறைகள், முரண்பாடுகள் குறைந்துவிடும்.

நியமம் என்பது தனி மனிதன் யோக சாதனை செய்யும்போது, தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் சுயகட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம் ஆகும். அது உடலை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது, வெளிப்புறத்திலும், தன்னுள்ளும் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களை பாதிப்பு அடையாமல் எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருப்பது.

தவம்(தபஸ்): பற்றி எரியும் நெருப்பை போல எப்போதும், மனச்சோர்வு கொள்ளாமல் இருப்பது, தொடர்ந்து முயற்சியும், பயிற்சியும் செய்து கொண்டே இருப்பது. உயர்ந்த நோக்கத்தை அடையும் வரை நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருப்பது தபஸ் ஆகும்.

இதேபோல், பிரபஞ்ச சக்தியோடு, தன்னை இணைத்துக் கொண்டு தான் செய்திடும், நற்காரியங்களிலும், வாழ்வின் ஏற்ற, இறக்க மற்றும் எல்லா நிலைகளிலும் பதற்றமின்றி நீரோடை போல அமைதியாக, பூரணமாக ஈடுபடுத்திக் கொள்வதே தபஸ்.

‘சுவாதாய’ என்பது தன்னால் ஏற்பட்ட நன்மை, தீமைகளையும், காரண காரியங்களையும், உண்மை நிலை, மாயை நிலை, நிலையானது, நிலையற்றது எது என்று தனக்குத் தானே ஆய்வு செய்து தன்னை மேலான நிலைக்கு அழைத்துச் செல்லும் வழிகளை கற்று அதை மேம்படுத்திக் கொண்டே ஒளிபொருந்திய வாழ்விற்கு முயற்சி செய்வது.

ஒரு முழுமை பெற்ற யோக சக்தி பயிற்சியில் பல்வேறு நுணுக்க முறைகள் உள்ளன.

சூரிய கதிர்களையும், மழை நீரும் தேவை இல்லாமல் பல்வேறு இடங்களில் விழுவதை தடுத்து முறைப்படுத்தி சேமிக்கும்போது அது சூரியசக்தியாகவும், நீர் மின்சக்தியாகவும் மாற்றி பயன்பாட்டிற்கு உதவுவதுபோல சதா சர்வகாலமும் பயனின்றி உழன்று கொண்டிருக்கும் மனதை ஒரு முகப்படுத்தி தியானத்தால் செயற்கரிய செயல்களை வாழ்வில் செய்து சாதிப்பது.

தியானத்தால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. பதற்றம் குறைகிறது. கருதரித்தபின்பு பெண்கள் தியானம் செய்து வந்தால் அறிவார்ந்த குழந்தையும் பிறக்கிறது. பிரசவத்தின்போது ரத்த அழுத்தம் ஏற்படாமலும் தடுக்கிறது.

 உயிர் ஆற்றல் என்பது மூச்சுக் காற்றுதான். உயிரான மூச்சுக் காற்றை பிரணாயாம பயிற்சிகளால் உடலுக்குள் அனுப்பி உள்உறுப்புகளை சிறப்பாக செயல்பட வைக்க உதவுவது. சூரிய பேதா, சந்திரபேதா, நாடிசுத்தி என 21 வகையான பிரணாயாம பயிற்சிகள் உள்ளன.

இந்த வழிமுறைகளை திருமூலர் திருமந்திரத்திலும், திருவள்ளுவர் ஞானவெட்டியான் என்ற நூலிலும் கூறி இருக்கின்றனர். நல்ல ஞானம் கொண்ட குருவிடம் பிரணாயாமத்தை கற்றுக் கொள்ளலாம். மூச்சுப் பயிற்சியால் ஆஸ்துமா, தூசு ஒவ்வாமை, நீண்டகால தலைவலி, ஒற்றை தலைவலி போன்றவை குணமாகும்.

 உடல், மனம், சுவாசம் ஆகிய மூன்றும் இணைந்த நுணுக்கமான உடல் இயக்க பயிற்சி ஆசனம். இதில் நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, குப்புற படுத்த நிலை, மல்லாந்து படுத்த நிலை, கைகளை தாங்கிய நிலை என 5 நிலைகள் உண்டு. உலக உயிர் ஜீவராசிகளை அடிப்படையாக கொண்டு 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன. இதில் அன்றாட வாழ்விற்கு 18 ஆசனங்கள் போதுமானது.

 உடல் முழுவதும் பரவி உள்ள நுண்ணிய நரம்புகளோடு தொடர்பை உண்டாக்கி அதற்கு சக்தியை தூண்டிவிடச் செய்வது, முத்திரைகள். முத்திரைகள் 3 வகைப்படும். இவற்றின் உட்பிரிவுகளில் சின் முத்திரை, கருட முத்திரை, மான் முத்திரை, விபரீத கரணி முத்திரை போன்றவை பிரபலம்.

பந்தம் என்பதற்கு பூட்டு அல்லது இணைப்பு என்று பொருள். யோகப் பயிற்சியின்போது உடலுக்குள் குறிப்பிட்ட நரம்பு, தசை இவைகளில் கவனத்தைச் செலுத்தி சக்தியை பாய்ச்சி சில வினாடிகள் அப்படியே நிறுத்துவது. இதனால் மனம் உடனடியாக கட்டுப்படும். பந்தமானது போக சக்தியை யோக சக்தியாக மாற்றுகிறது.

 கபாலபதி, திராடக, நேதி, தொவுதி, நெவுலி, பஸ்தி ஆகியவை 6 வித உடற் சுத்திகள்.

யோகா கலை பயிற்சியில் மேற்கண்ட 6 வித(தியானம், பிரணாயாமம், ஆசனம், முத்திரைகள், பந்தம், உடற்சுத்தி முறைகள்) பயிற்சிகளும் மனிதனின் ஆயுளை நீட்டிக்கச் செய்கிறது.

சர்வதேச யோகா திருநாளில் தாகம் கொண்டு, உலகம் போற்றும் யோகாவை பயில்வோம். வாழ்வில் முன்னேற்றம் காண்போம்.

கோவில்களில் யோகா

* ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அபூர்வ விநாயகர் சிலை டெல்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விநாயகர் சிலை யோகாசன நிலையில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

*  பெங்களூருவில் உள்ள முருகேஷ்பால்யா என்னும் இடத்தில் உள்ள சிவன் பத்மாசன நிலையில் இருப்பது போன்ற 65 அடி உயர சிலை நிறுவப்பட்டு உள்ளது.

*  தமிழகத்தில் 800 முதல் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோவில்கள் அனைத்திலுமே ஏதாவது ஒரு சிற்பம் யோகா நிலையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதை பார்க்க இயலும்.

*  5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகத்தில் யோகா கலையின் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. மவுரியர்கள், குப்தர்கள் காலத்தில் யோகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ பயன்கள்

மூட்டுவலி, நீண்ட நாள் தலைவலி, நீரிழிவு, ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, உடல் பருமன், சளித்தொல்லை ஆகியவை குறைகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. தோல்நோய்கள், மலச்சிக்கல், கை–கால் வலிப்பு, மூச்சுத் திணறல், மாதவிலக்கு கோளாறுகள் போன்றவை குணம் அடைகின்றன. பழைய, புதிய காயங்களும் விரைவில் குணமாகிறது.

ஆங்கில முறை மருத்துவர்கள் கூட நோய் கட்டுப்படுவதற்கு யோகாவை தற்போது சிபாரிசு செய்கின்றனர்.

சுவாமி விவேகானந்தர் விதைத்தது

யோகாவை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை சுவாமி விவேகானந்தரையே சேரும். அவர் 19–ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20–ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் யோகாவின் பெருமையை மேற்கத்திய நாடுகளில் எடுத்துரைத்தார். எனினும் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் 1970–ம் ஆண்டுக்கு பின்பே யோகாவின் மகிமை முழுமையாக உணரப்பட்டது. தற்போது 200 நாடுகளில் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது.

பல நாடுகளின் பள்ளிக் கூடங்களில் யோகா ஒரு பாடமாகவே வைக்கப்பட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும் விளையாட்டு துறையுடன் யோகா இணைக்கப்பட்டு இருக்கிறது.

பயிற்சிக்கு உகந்த நேரம்

யோகா பயிற்சியை திறந்தவெளி அல்லது வெளிச்சம், காற்றோட்டம் கொண்ட உள்ளரங்க கூடங்களில் மேற்கொள்ளலாம். உடலின் நீள, அகல அளவிற்கு தகுந்த தரைவிரிப்பை பயன்படுத்தி செய்யலாம். குறைந்த பட்சம் 45 நிமிடங்களாவது அன்றாடம் பயிற்சி செய்வது அவசியம்.

பொழுது புலரும் நேரம் அல்லது பொழுது சாயும் நேரங்களில் பயிற்சி செய்வது அதிக பலன் தரும். நிசப்தமான சூழ்நிலையில் பயிற்சி செய்தால் மனம் உடனடியாக அமைதி நிலைக்கு திரும்பும்.

நன்றி தினதந்தி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...