அவசரநிலை சட்டத்தை அறிமுகப் படுத்த சோனியா காந்தி முயன்றார்

இந்திராகாந்தி நாட்டின் பிரதமராக இருந்த போது கடந்த 25-6-1975 முதல் 21-3-1977 வரை ‘மிசா’ என்னும் நெருக்கடி நிலை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டது. இந்த காலகட்டத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை தடை செய்யப் பட்டிருந்தது. பத்திரிகை செய்திகள் அனைத்தும் தணிக்கைசெய்யப்பட்டன. அரசுக்கு எதிரான கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

பல்வேறு அரசியல் கட்சிதலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் போலீசாரின் கண்களில் இருந்து தப்பித்து பிற மாநிலங்களில் தலைமறைவாக மாறு வேடத்தில் வாழ்ந்தனர். இந்த அவசர நிலை சட்டம் நாட்டின் மீது திணிக்கப்பட்ட 41-ம் ஆண்டு ‘கருப்புதினம்’ நேற்று டெல்லி உள்பட நாடுமுழுவதும் கடைபிடிக்கப்பட்டது.

கேரளமாநிலம் திருவனந்த புரத்தில் இது தொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக. தலைவரும், பாராளுமன்ற மாநிலங் களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி பங்கேற்று பேசினார். அப்போது, கடந்த 2011-12 ஆண்டு வாக்கில் நாட்டில் அவசரநிலை சட்டத்தை அறிமுகப் படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முயன்றதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்து தீவிரவாதம் என்னும் புனைக் கதையை உருவாக்கி, அதை கட்டுப்படுத்தும் சாக்கில் நாட்டில் மீண்டும் அவசர நிலை சட்டத்தை அறிமுகப் படுத்த சோனியாகாந்தி முயன்றதாக தெரிவித்த சுப்பிரமணிய சாமி இது தொடர்பான விரிவான தகவல்களை விரைவில் வெளியிடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...