அடுத்த மாதம் தொடக்கத்தில் மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறியகட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மராட்டிய மந்திரி சபையில் மொத்தம் 30 மந்திரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், மந்திரி சபையின் பலத்தை 42 ஆக உயர்த்த முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டமிட்டுள்ளார். அதன்படி, மந்திரிசபை விரிவாக்கம் இந்தமாத கடைசியில் நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அடுத்தமாதம் (ஜூலை) முதல் வாரம் வரை மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிவைக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மந்திரி சபை விரிவாக்கம் தள்ளிவைக்கப்பட்டதற்கு முதன்மை காரணம் பருவ மழை தாமதமே ஆகும். மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாக பல்வேறு சந்திப்புகள் நடைபெற்று முடிந்து விட்டன. பா.ஜனதா- சிவசேனா இடையே வார்த்தைப் போர் இருந்தாலும், சிவசேனாவுக்கு மந்திரி சபை விரிவாக்கத்தின் போது 2 இடங்கள் கூடுதலாக அளிப்பதில் எந்தவொரு மாற்றமு மில்லை.
இருந்தாலும், இந்தவிவகாரத்தில் சிவசேனா தலைமையிடம் இது வரை பேசவில்லை. இந்தவார இறுதியில் மந்திரி சபை விரிவாக்கம் நடைபெற முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விரும்பினார். ஆனால், உத்தவ் தாக்கரே வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருப்பதும், மந்திரிசபை விரிவாக்கத்துக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.
அதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம்வகிக்கும் சுவாபிமானி சேத்காரி சங்கதானா, இந்திய குடியரசு கட்சி மற்றும் ராஷ்டிரசமாஜ் பக்ஷா உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கும் மந்திரி சபை விரிவாக்கத்தின் போது பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு வாய்ப்பாக அக்கட்சி தலைவர்கள் டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர்களை சமீபத்தில் சந்தித்துபேசியது குறிப்பிடத்தக்கது.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.