திண்டுக்கல்லில் ஆர்எஸ்எஸ். பிரமுகரை கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நான்குபேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டணை வழங்கி நீதிபதி அசோகன் உத்தர விட்டார்.
திண்டுக்கல் அருகே மாசிலாமணி புரத்தில் வசித்து வந்தவர் ஆர்எஸ்எஸ் இயக்க மாவட்டஅமைப்பாளர் பாஸ்கரன் (32). 2008 டிசம்பர் 21-ம் தேதி பாஸ்கரனை அவரதுவீட்டருகே சிலர் வெட்டிக்கொல்ல முயன்றனர். இதில் பாஸ்கரனின் கால் துண்டானது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை இலியாஸ், ரஹமத்துல்லா, ரியாஸ், சையது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிமன்றத்தில் நீதிபதி அசோகன் முன்னிலையில் நடை பெற்றுவந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் ஜூன் 27-ம் தேதி முடிவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப் பட்டது. தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு 5 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை விதித்து நீதிபதி அசோகன் உத்தர விட்டார்.
தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.