மதுரை மீனாட்சி யம்மன் கோயில், தாஜ்மஹால் உட்பட 10 முக்கிய இடங்களில் தூய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்துக்கு பொறுப் பேற்றுள்ள மத்திய குடிநீர் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்துறை அமைச்சர் சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து அத்துறையின் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:
தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக, நாட்டில் உள்ள 100 இடங்களை தேர்வு செய்து சுத்தப்படுத்தும் பணிகளை தொடங்க உள்ளோம்.. புனிதஸ்தலங்கள் அல்லது சுற்றுலாத் தளங்களாக இவை இருக்கலாம். முதல் கட்டமாக, 10 முக்கிய இடங்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
காஷ்மீரில் உள்ள வைஷ்ணவிதேவி கோயில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாஜ்மஹால் மற்றும் மணிகர்ணிகா படித்துறை, ஆந்திராவில் திருப்பதி, பஞ்சாபில் பொற்கோயில், ராஜஸ்தானில் அஜ்மீர்தர்கா, ஒடிசாவில் ஜெகந்நாதர் கோயில், மஹாராஷ்டிராவில் சத்ரபதிசிவாஜி ரயில் நிலையம், அசாமில் காமாக்யா கோயில், தமிழகத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆகிய 10 இடங்களில் தூய்மைப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இந்த 10 இடங்களில் பணிகள் முடிந்தவுடன், மீதமுள்ள 90 இடங்களிலும் அதே போன்ற தூய்மைப் பணிகள் தொடரும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.