சிறிய வார்த்தை யையும் பெரிதுபடுத்துவதால், பொதுவாழ்க்கையில் நகைச் சுவைக்கு இடமில்லாமல் போய்விட்டது என பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் கூறி இருந்தார். இந்நிலையில், ராணுவமந்திரி மனோகர் பாரிக்கரும் அதேகருத்தை தெரிவித்துள்ளார்.
அவரது சொந்தமாநிலமான கோவாவின் தலைநகர் பனாஜியில் கோவா என்ஜினீயரிங் கல்லூரியின் பொன் விழா நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற போது, அவர் இதை குறிப்பிட்டார். அவர்பேசியதாவது:–
நான் கோவாவில் இருக்கும் போது, ‘ஜோக்’ அடித்து நகைச் சுவையாக பேசும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், டெல்லியில் இருக்கும் போது அப்படி நகைச்சுவையாக பேசபயமாக இருக்கிறது. ஏனென்றால், ‘ஜோக்’ அடித்து பேசினால், அதை திரித்துக் கூறி குழப்பத்தை உருவாக்கி விடுகிறார்கள். அந்தளவுக்கு சர்ச்சையை உருவாக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கோவாவில் சர்வ சாதாரணமாக ‘ஜோக்’ அடிக்க முடிகிறது இவ்வாறு அவர் பேசினார்.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.