தென்னாப்பிரிக்காவில் ரயிலில் பயணம் செய்த மோடி

தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி, மகாத்மா காந்தியை நிறவெறி காரணமாக வெள்ளையர்கள் நடுவழியில் இறக்கிவிட்ட ரயில் நிலையத்துக்கு சென்று  ரயிலில் பயணம் செய்துள்ளார்.

பென்ட்ரிச் ரயில் நிலையத்திலிருந்து பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்துக்கு (15 கி.மீ.), காந்தி பயணம்செய்தது போன்ற ரயிலில் பயணம் செய்தார்

காந்தியை நடுவழியில் இறக்கிவிட்ட பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தை மோடி பார்வை யிட்டார். பின்னர் அந்த ரயில் நிலை யத்தில் காந்தியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சியையும் தொடங்கிவைத்தார். நிறவெறிக்கு எதிரான காந்தியின் போராட்டத்துக்கு மரியாதைசெலுத்தும் வகையில் இந்தப்பயணம் அமைந்தது.

தென்னாப் பிரிக்காவில் வசித்துவந்த காந்தி, கடந்த 1893-ம் ஆண்டு ஜூன் 7-ம்தேதி டர்பன் நகரிலிருந்து பிரிடோரி யாவுக்கு ரயிலில் முதல்வகுப்பில் பயணம் செய்தார். கருப்பினத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த பெட்டியிலிருந்து வெளியேறி 3-ம் வகுப்பில் பயணிக் குமாறு காந்தியை வெள்ளையர்கள் கேட்டுக் கொண்டனர்.

தான் முதல் வகுப்புக்கான டிக்கெட் வைத்திரு ப்பதாகக் கூறி, இதற்கு மறுப்புதெரிவித்த காந்தியை பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டார்.

இந்த சம்பவத்தால் கொதித் தெழுந்தகாந்தி, தென்னாப் பிரிக்காவில் ஆங்கிலேயர்களின் நிறவெறிக்கு எதிராகவும் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட கருப் பின மக்களுக்கு ஆதரவாகவும் அகிம்சைவழியில் போராட்டத்தை தொடங்கினார். இந்தப் போராட்டம் தான் இந்தியாவில் காந்தி சுதந்திரப் போராட்டத்தில் இறங்குவதற்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...