மற்ற மாநிலங்களிலெல்லாம் அம்மாநிலத்தின், கலாச்சாரம், பண்பாடு மற்றும் பெரிய மனிதர்களை கொச்சைப்படுத்தினால் அவர்கள் மீது அம்மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
உதாரணமாக வீரசைவத்தை தோற்றுவித்த பாசவையாவையும், அவருடைய சகோதரி அக்கமாவையும் இழிவுபடுத்திய "தர்மகாரனா" புத்தகத்தை கர்நாடக அரசு தடை செய்தது.
விநாயகப் பெருமானை தவறாக 'துந்தி' என்ற புத்தகத்தில் சித்தரித்ததற்காக அதன் எழுத்தாளர் யோகேஷ் மாஸ்டரை கர்நாடக அரசு கைது செய்து, அவர் மீது குற்றவியல் வழக்கை தாக்கல் செய்திருக்கிறது. கர்நாடக நீதிமன்றமும் அந்த புத்தகத்திற்கு தடை விதித்திருக்கிறது.
மகாத்மா காந்தியை கொச்சைப்படுத்தியதாக கூறி ஜோசப் லேவெல்ட் எழுதிய புத்தகத்தை குஜராத் அரசாங்கம் தடை செய்தது.
வல்லபாய் பட்டேலை தவறாக சித்தரித்தற்காக குஜராத் மாநிலம் ஜஸ்வந்த் எழுதிய 'ஜின்னா பற்றிய புத்தகத்தை தடை செய்தது.
இஸ்லாமையும், நபிகள் நாயகத்தையும் தவறாக சித்தரித்ததாக கூறி ஆர்.வி. பஷின் எழுதிய "இஸ்லாம் – உலகரங்கில் அரசியல் தாக்குதல்" என்ற புத்தகத்தை மஹாராஷ்டிர அரசாங்கம் தடை செய்தது.
சத்திரபதி சிவாஜியை தவறாக சித்தரித்த ஜேம்ஸ் லெயின் புத்தகத்தை மகாராஷ்டிர மாநிலம் தடைசெய்தது.
மராத்திய மகான்களான துக்ராம், தியானேஸ்வர் ஆகியோரை தவறாக சித்தரித்த ஆனந்த யாதவ் எழுதிய புத்தகங்களுக்கு புனே நீதிமன்றம் தடை விதித்தது.
ஏசு கிருஸ்துவை இழிவுபடுத்துவதாக கூறி நாகலாந்து அரசாங்கம் 'டாவின்சி கோடை' தடை செய்தது.
தஸ்லீமா நஸ் ரீன் எழுதிய ’திவிக்ஹாந்தித்தோ’ நபிகள் நாயகத்தை அவமானபடுத்தியதாக கூறி மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசாங்கம் அந்த புத்தகத்திற்கு தடை விதித்தது. கம்யூனிஸ்டுகளுக்கு கருத்து சுதந்திரமெல்லாம் ஹிந்துக்களை எதிர்த்தால்தான் போல.
பெரியார் எழுதி ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட ‘உண்மையான இராமாயணம்’என்ற புத்தகத்தை உத்திரப்பிரதேச அரசாங்கம் தடை செய்தது.
ஆனால் தமிழகத்தில் ஹிந்து கடவுள்களையும், ஹிந்து நம்பிக்கையையும் இழிவுபடுத்தி ஆண்டுக்கு ஒன்று என்று புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஈன செயல்கள் செய்பவர்கள் மீது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தேவையான உதவிகளை செய்து வருகிறது.
பெருமாள் முருகன் மீது திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டபோது, அப்புகாரின் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெருமாள் முருகனுக்கு எதிராக மாஜிஸ்டிரேட்டிடம் கொடுக்கப்பட்ட புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. பெருமாள் முருகன் கேட்டுக்கொண்டதின் பெயரில், அவர் கேட்ட கல்லூரியிலேயே அவருக்கும், அவரது மனைவிக்கும் சென்னையில் பணிமாற்றம் செய்து கொடுத்தது அரசு.
எனவே தமிழக அரசிடன் இம்மாதிரி விவகாரங்களில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால் ‘ பிம்பிளிகி பிலாப்பி! மாமா பிஸ்கோத்து’என்ற பதில்தான் வரும்.
நன்றி மா.சொக்கலிங்கம்
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.