மாநிலங்களவையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப்பேசினார். அப்போது, ஜிஎஸ்டி மசோதாவுக்கு அவர் ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற மாநிலங்க ளவையில் வியாழக்கிழமை கேள்விநேரம் முடிந்ததும், பிரதமர் தனது இருக்கையை விட்டு எழுந்து, எதிர்க்கட்சி வரிசைக்கு நடந்துசென்றார். அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ஆனந்த் சர்மாவுடன் அவர் கைகுலுக்கினார். அதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரிடம் சென்ற பிரதமர், அவருடன் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, திமுக உறுப்பினர் கனிமொழி, நியமன உறுப்பினர் அனுஆகா உள்ளிட்ட எம்.பி.க்கள் பிரதமர் அருகில் சென்று, வணக்கம் தெரிவித்தனர். சரத்பவாருடன் பேசிய பிறகு மோடி, அவையை விட்டுப் புறப்பட்டுச்சென்றார். ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக அவர் பவாருடன் விவாதித்ததாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மாநிலங்க ளவையில் பெரும்பான்மை பலம் இல்லை. எனவே, ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைத்திரட்ட அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.