அரசியலில் மாறுபட்டகொள்கைகள் இருந்தபோதிலும், பல்வேறு திட்டங்களை செயல்ப டுத்துவதில் அரசுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுபவர் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி. நான் டெல்லிக்கு வந்ததுமுதல் அவர் எனக்கு வழிகாட்டியாக விளங்குகிறார் என்று பிரதமர் நரேந்திரமோடி புகழ்ந்தார். ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்று 4 ஆண்டு முடிவடைந்ததை யொட்டி, ஜனாதிபதி மாளிகையில் 2வது அருங் காட்சியகம் தொடக்க விழா நேற்று நடந்தது. இவ்விழாவில், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அப்போது ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து மோடி பேசியதாவது: அரசியலில் எதிரெதிர் நிலைப்பாட்டுடன் இருந்தாலும் பொதுவிஷயங்களில் வேறுபாடுகளை மறந்து, இணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்து ஜனாதிபதி பிரணாப்பிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். டெல்லி அரசியல் எனக்கு புதியதாக இருந்தநிலையில், என்னை கைபிடித்து அழைத்து செல்லும் வழிகாட்டியாக விளங்கியவர் பிரணாப். திட்டங்களை செயல் படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எனக்கு ஆசானாக விளங்குகிறார். ஒருசிலரே இதுபோன்ற தனிச்சிறப்புகளை பெற்றிருப்பார்கள்.
ஜனாதிபதியின் ஒப்புதலுடன் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி, நீர் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதை நினைத்து பெருமை அடைகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு பிரணாப்பின் பங்கு மகத்தானது. வரலாறு, கலை, கற்பனைத் திறன், தொழில் நுட்பம் ஆகியவை ஒருங்கிணைந்த கூடமாக இந்த அருங் காட்சியகம் உள்ளது. வரலாற்றை அறிந்துகொள்ள இதை ஒவ்வொருவரும் பார்வையிடவேண்டும். வரலாறு மட்டுமின்றி தற்போதைய நிகழ்வுகளையும் இந்த அருங்காட்சி யகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.