மத்திய நிதியுதவியின் கீழ் செயல்படும் திட்டங்களை கண்காணிக்க உள்ளூர் எம்பி தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
டெல்லியில் பாஜக.,வின் நாடாளுமன்றகுழு கூட்டம் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில் கட்சித்தலைவர் அமித்ஷா, மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற எம்பிக்கள் பங்கேற்றனர்.
அப்போது மத்திய நிதியுதவியின் கீழ் செயல்படும் திட்டங்களை கண்காணிக்க உள்ளூர் எம்பி தலைமையில் மாவட்டளவிலான குழு அமைக்கப்படும் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இதை அனைத்து எம்பிக்களும் பயன் படுத்தி திட்டங்கள் சிறப்பாக நிறைவேறுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறினார். மேலும் இக்குழுவின் முதல்கூட்டம் அடுத்த மாதம் நடக்கும் என்றும் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பாஜக எம்பிக்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார்,‘‘இந்தக் கூட்டத்தொடரில் பினாமி பணபரிவர்த்தனைகள் தடுப்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக் களை நிறைவேற்ற அரசு ஆர்வமாக உள்ளது.
மக்களவையில் 5 மசோதாக்களும், மாநிலங்களவையில் 2 மசோதாக்களும் நிறைவேறுவதில் தொடர்ந்து சிக்கல்நீடிக்கிறது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பட்டியலிட்டபடியே நாடாளுமன்ற அலுவல்களை அரசு நடத்திவருகிறது. இந்தகூட்டத் தொடரில் மொத்தம் 16 மசோதாக்களும், நான்கு புதியமசோதாக்களும் நிறைவேற்ற அரசு பரிசீலித்துவருகிறது’’ என்றார்.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.