ஆயுதங்கள் கடத்தியவழக்கில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச்சேர்ந்த அபு ஜிண்டாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. சக குற்றவாளிகளுக்கும் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், 2006ல், இரண்டுகார்களில், பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டன. போலீசார் நடத்திய சோதனையில், ஒருவாகனம் பிடிப்பட்டது. அதில், 30 கிலோ ஆர்டிஎக்ஸ்., வெடிபொருள், 10 ஏ.கே.47 துப்பாக்கிகள், 3,200 தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன.
மற்றொரு வாகனத்தை ஓட்டிச்சென்ற, தீவிரவாதி சையது ஜபியுதீன் அன்சாரி என்கிற அபுஜிண்டால், தப்பி ஓடிவிட்டான். மும்பை தாக்குதல்வழக்கின் முக்கிய குற்றவாளியான அபு ஜிண்டால், வங்கதேசம் வழியாக பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றான்.
இதனிடையே, சவுதி அரேபியாவில் இருந்து, 2012ல் இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டான் அபு ஜிண்டால். அவுரங்காபாத்தில் ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக, அபுஜிண்டால் உட்பட, 22 பேர் மீது, மஹாராஷ்டிரா திட்டமிட்ட குற்ற நடவடிக்கைகள் கட்டுப் பாட்டு சட்டசிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
குஜராத் முதல்வராக இருந்த, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன்தொகாடியா ஆகியோரை கொலைசெய்ய, இவர்கள் திட்டமிட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இந்தவழக்கில், அபு ஜிண்டால் உட்பட, 12 பேர் குற்றவாளிகள் என, சிறப்புகோர்ட் கடந்த மாத இறுதியில் அறிவித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அபுஜிண்டால் மற்றும் 6 தீவிரவாதிகளுக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டுள்ளது. இரு குற்றவாளிகளுக்கு தலா 14 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 குற்றவாளிகளுக்கு தலா 8 வருட சிறைதண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.