சுதந்திர தின விழாவையொட்டி தமிழக பா.ஜ.க. சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
* 14-ந்தேதி- இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் சுதந்திர ஜோதி ஓட்டம் நடக்கிறது.
* 15-ந்தேதி- தேசிய கொடியேற்றத்துடன், பாரதமாதா வணக்க நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.
* 16-ந்தேதி- பாரதியார் இல்லத்தில் இருந்து இரு சக்கர வாகன பேரணியை மத்திய மந்திரி மேனகாகாந்தி தொடங்கி வைக்கிறார்.
* 18-ந்தேதி- விருதுநகரில் காமராஜர் நினைவிடத்தில் மத்திய மந்திரி சதனாந்த கவுடா மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
* 18-ந்தேதி- மகளிரணி சார்பில் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், தியாகிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ராக்கி கயிறு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
* 20-ந்தேதி- தூத்துக்குடியில் வ.உ.சி. சிதம்பரனார் நினைவிடத்தில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மலர் அஞ்சலி செலுத்துகிறார். மற்ற தியாகிகளின் நினைவிடத்துக்கு பல மத்திய மந்திரிகள் வருகை தர உள்ளனர்.
சுதந்திர தினத்தன்று அனைவரும் காதி அல்லது கைத்தறி அணிவோம் என்று உறுதி எடுத்து கொண்டு அனைவரும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டால் நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றியதாகும்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.