சவுதி அரேபியா; செப்டம்பர், 25க்குள் நாடுதிரும்பினால், இலவசமாக அழைத்துவரப்படுவர்

சவுதி அரேபியாவில், வேலையின்றி தவிக்கும் இந்தியர்கள், செப்டம்பர், 25க்குள் நாடுதிரும்பினால், இலவசமாக, விமானத்தில் அழைத்துவரப்படுவர்,'' என, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

 

சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை வீழ்ச்சியால், எண்ணெய்வளமிக்க நாடான சவுதி அரேபியாவில், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிக்கன நடவடிக்கைகளை, அந்தநாட்டு அரசு முடுக்கி விட்டு உள்ளது.


இத்தகைய அதிரடி மாற்றங்களால், ஆயிரக்கணக்கான இந்தியதொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் வேலைசெய்த நிறுவனங்களில் சம்பளபாக்கி இருப்பதால், அதை பெறும் வரை, அங்கேயே இருக்கப்போவதாக கூறி வருகின்றனர். நாட்கள் செல்லச்செல்ல, நிலைமை மேலும் மோசமாகக்கூடும் என்பதால், இந்தியத் தொழிலாளர்கள் உடனடியாக தாயகம்திரும்ப வேண்டுமென, மத்திய அரசு விரும்புகிறது.

இதுதொடர்பாக, வெளியுறவு இணையமைச்சர், வி.கே.சிங், சமீபத்தில், சவுதி அரேபியாசென்று திரும்பினார். அங்குள்ள இந்திய தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு சார்பில், உணவு,இருப்பிடவசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது.

நிலுவை தொகை: இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதாவது: தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுடன்,சவுதி அரேபியஅரசு பேச்சு நடத்திவருகிறது. பிரச்னை தீர்ந்ததும், தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய நிலுவைத்தொகை கிடைக்கும்.

வரும், செப்டம்பர், 25க்குள் இந்தியாதிரும்பும் தொழிலாளர்கள், எவ்வித கட்டணமுமின்றி, விமானம் மூலம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும். அதற்குபின் இந்தியா வருவோர், அனைத்து செலவுகளையும், அவர்களே ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...