குளச்சல் துறைமுகம் குமரி மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமே!

குளச்சல், கிள்ளியூர், கன்யாகுமரி, விளவங்கோடு, பத்மநாபபுரம், நாகர்கோவில் ஆகிய 6 தொகுதிகளைக் கொண்டது குமரி மாவட்டம். இதன் எம்.எல்.ஏக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நின்று வென்றவர்கள். மாவட்டத்திற்கு என மாநில அமைச்சர் இல்லை; எல்லோருமே எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் என்பதால் இவர்கள் அரசியல் செய்ய இப்படித் தூண்டி விடுவதாக தோன்றுகிறது என்று தொகுதி மக்கள் நினைக்கிறார்கள்.

குளச்சல் எம்.எல்.ஏ ஜே.ஜி. பிரின்ஸ் ஏற்கனவே உள்ள மேற்கு கடற்கரை சாலை, கன்யாகுமரி – களியக்காவிளை சாலை, ஆரல்வாய்மொழி நெடுமங்காடு சாலை ஆகியவைகளை மேம்படுத்தப் போவதாகவும் அதற்கு மக்களிடம் உள்ள நிலத்தைப் பிடுங்கப் போகிறார்கள்" என்று குற்றம் சாட்டுகிறார்.

நாடு முழுவதும் சாலைகளை விரிவுபடுத்துவது தானே வளர்ச்சியின் அடிப்படை கட்டமைப்பு?

விளவங்காடு எம்.எல்.ஏ விஜயதரணி, மாவட்ட எம்.எல்.ஏ ஆன தனக்கே திட்டம் பற்றி முழுமையாகத் தெரியாது" என்கிறார்.

தெரிந்து கொள்ளுங்கள், பிறகு எதிர்க்கலாமே!

கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், இத்துறைமுகத்தால் பெரிய அளவில் வேலை வாய்ப்பு உருவாக வாய்ப்பு இல்லை" என்கிறார்.

இவர் குற்றச்சாட்டை முழுவதும் மறுக்கிறார் பாஜகவின் விக்டோரியா கௌரி.

வர்த்தக துறைமுகமாக இனயம் செயல்பட ஆரம்பித்தால் என்ன கிடைக்கும் தொகுதி மக்களுக்கு எனக் கேட்டபோது,

*   சர்வதேச கப்பல்கள் இங்கு தங்கள்  தேவைக்கு எரிபொருள் நாடும்.

*   கட்டுமானப் பணிகள் அதிகரிக்கும்.

*   ஆட்கள், வாகனப் போக்குவரத்து கூடும்.

*   சிறு தொழில்கள் செழிக்கும்.

*   சரக்குகளைக் கையாள ஆரம்பிக்கும்   போது ஃபியூமிகேஷன் செய்துதான்   அனுப்ப வேண்டும்.

(கண்டெயினர்களில் ஏற்றப்படும் பொருட்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற செய்யப்படும் ஆயத்தம் இது.) இதைச் செய்ய சிலர் தேவைப்படுவர்.

*   கப்பலுக்கு காய்கறி, பால், முட்டை போன்ற   அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யலாம்              என்று அடுக்குகிறார்.

மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே சாலை போக்குவரத்தை மேம்படுத்த எக்ஸ்பிரஸ் வழித்தடம் அமைக்கும் திட்டம் பற்றிக் கூறுகையில், குளச்சல் முனையத்தில் இருந்து திருப்பூர் தொழில் குழுமத்திற்கு இடையே விரைவுச் சாலைத் திட்டம் துவக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சிறிய அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதும் துறைமுகத்திற்காக அல்ல; சாலை விரிவாக்கத்திற்கே என தெளிவுபடுத்தினார்.

மீனவ சமுதாயத்தின் பயங்கள்

மீனவ மக்களிடைய தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற பயமே தூக்கலாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. குளச்சலில் இருந்து 8 கிமீ தள்ளியுள்ள இனயம் என்ற இடத்திற்கு ப்ராஜெக்ட் மாற்றப்பட்டதால் நட்டளம், கிள்ளியூர், பள்ளூர், கீழ்குளம் மக்கள் பாதிக்கப்படுவதாக நினைக்கிறார்கள். 4 வழிச் சாலையும் ரயில்வே லைனும் இந்த 4 கிராமங்களின் வழியே செல்ல திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இது உண்ணாமலைக் கடை தொட்டு மிடானம் வரை 12 கிமீ நீளம் உள்ள தங்கள் வீடுகள், செழிப்பான விவசாய பூமியை இழக்க நேரிடும் என்ற வேதனை அவர்களுக்கு. ஏறக்குறைய 10 கிராமங்களில் இருந்து 25 லட்சம் மீனவர்கள் கட்டாய இடம் மாற்றப்படுவார்கள் என்றும் தொழில் பாதிக்கும் என்றும் யோசிக்கிறார்கள்.

துறைமுகம் பற்றி மோடிஜி

முதன் முறையாக 21,000 கோடி ரூபாய் குமரி மாவட்டத்தை அடைகிறது. துறைமுகம் குமரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தருகிறது. சுற்றுலா என்பது மிகப்பெரிய தொழில். இனயத்தில் துறைமுகம் வருவதால் வேலையாட்கள் வெளியில் இருந்து வரப்போவது இல்லை. குமரி மாவட்ட மக்களுக்கு அது வரப்பிரசாதமே. ஏனைய உற்பத்தித் துறை தொழில்களை விட துறைமுகங்களால் அதிகமாகவும் தொடர்ந்தும் சம்பளம் தந்து வேலை ஆட்களைத் தக்க வைக்க முடியும். இதற்கான முதலீடு வெளியில் இருந்து  குமரி மாவட்டத்திற்கு பாய்கிறது. பணப் புழக்கம் அதிகரிக்கும். மந்தநிலை மாறும். மிக அதிக அளவு நிலம் என்பது கடலில்தான் எடுக்கப்படப் போகிறது. உள்ளூர் போக்குவரத்துக்காக சாலைகள் மேம்பாடு அடைந்தால் மக்களுக்கு வாகனப் போக்குவரத்து செம்மைப்பட்டு அதனால் புதிய தொழில்கள் விருத்தியடையும்.

மக்கள் கருத்து

இதைப்பற்றி செந்தமிழ் சிலம்பு என்பவர் கூறுகையில் குளச்சல்/இனயம் வர்த்தக துறைமுகத்தை 3 வகையான மக்கள் எதிர்க்கிறார்கள் என்கிறார்.

1. விவரம் அறியாத உள்ளூர்வாசிகள், தவறான தகவலால் எதிர்க்கிறார்கள்.

2. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தார் தங்கள் வளர்ச்சி பாதிக்கப்படுமோ என சந்தேகிக்கிறார்கள்.

3. இதுபோன்ற எதிர்ப்பாளர்களுக்கு துபாய்  மார்க்கமாக நிதியுதவி வழங்கும் சீனா மற்றும் ஸ்ரீலங்கா.

முதல் குற்றச்சாட்டு: ஏன் உள்ளூர்வாசிகள் விவரம் அறியாதவர்கள்? தவறான தகவல் எது? யார் பரப்புகிறார்கள்? அவர்களுக்கு என்ன லாபம்?

‘கன்யாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சியாக அமைய இருக்கும் குளச்சல் துறைமுகத்தைத் தடுக்கும்’  போஸ்டர்  நம் கண்ணைக் கவர்ந்தது. விசாரித்தோம்.

Coastal Peace and Development – கடலோர அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் கத்தோலிக்க பாதிரியார் கில்டஸ் ஒரு இயக்கம் நடத்துகிறார். அதன் மூலம் துறைமுகத்தை எதிர்க்கிறார்.

மேலும் கொழும்பு வர்த்தக துறைமுகம், இனயம் துறைமுகம், வந்தால் பாதிப்புக்கு உள்ளாகும் என பயப்படுகிறது. கோட்டார் மாவட்ட பிஷப் பாதிரி பீட்டர் ஃபெர்னாந்து, தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வாக்கு அளிக்குமாறு பகிரங்கமாக கேட்டதும் சர்வதேச பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டதே. அதை அதிமுக பிரமுகர்கள் தளவாய் சுந்தரம், பச்சைமால், ஜான் தங்கம் ஆகியோர் சிடியாக தயாரித்து முதல்வர் பார்வைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்று குமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் கே. ஜெயபால், தலைவர் தம்பித்துரை ஆகியோர் கூறினர். முன்னவர் ரோமன் கத்தோலிக்கர், பின்னவர் சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்.

சென்ட்ரல் மெரைன் ஃபிஷரீஸ்ஸின் முதன்மை விஞ்ஞானி (Central Marine ­Fisheries, Principal Scientist)  லால் மோஹன் சொல்கிறார்:

* ஒரு பக்கம் மிக அதிகமான மணல் பரப்பு  மறுபுறம் மணல் இல்லாததும் ஆக இந்த இடம் மாறும். கிராமங்கள் கூட மூழ்கும் அபாயம் உண்டு.

* 20 மீட்டர் ஆழம் தோண்டப் போகிறார்களாம். அப்போது குப்பைக்கூளங்கள்  கரையை பாதிக்குமே. கடல்வாழ் செடிகள் பாதிக்கப்படும். எங்கள் கடல்புறம் எதுவும் உற்பத்தி ஆகாத இடமாக மாறிப் போகும்.

* ஆறு கிமீ ட்ரெட்ஜிங் செய்யும் போது உவர் நீர் எங்கும் வியாபிக்கும்.

* ப்ரேக் வாட்டர்ஸை கட்டுவதற்கு மிகப்பெரிய பாறைகள் தேவைப்படும் – குன்றுகளை தரைமட்டம் ஆக்குவார்கள்.

என்ன இது புதுக் குழப்பம் என்று பாஜகவின் மீனவர் அணித்தலைவர் சதீஷ் அவர்களைத் தொடர்பு கொண்டு மேற்சொன்னவற்றை விவரித்தோம். அவர் சொன்னதாவது:

சென்னை துறைமுகம், காசிமேடு மீன் பிடித் துறைமுகமும் அருகருகில் தானே உள்ளது. மீன் கிடைக்கவில்லையா?

கடலை ஆழப்படுத்துவது, நீச்சல் தெரிந்தவர்களுக்கும் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பல்வேறு வேலைகள் காத்திருக்கின்றன. சிப்பி எடுப்பது, கூட நல்ல தொழில். நாமும் விசாரித்ததில் கடிய பட்டிணம், முட்டம் பகுதிகளில் இளைஞர்கள் இதில் லாபகரமாக ஈடுபடுவது தெரிந்தது.

மேலும் கூறுகையில், 26.12.2013 அன்று மத்திய அமைச்சர் பொன்னார் மீனவர் மாநாடு நடத்தி பேசும்போது, அவர் எம்.பியாக இல்லை. அப்போது 5,000 பேர் கூடியிருந்தனர். பாஜக ஜெயிக்கும்; அதன் ஆதரவோடு குளச்சல் துறைமுகம் வேண்டுமானால் என்னைத் தேர்ந்தெடுங்கள் என்று உறுதியாகச் சொன்னார். மக்கள் அவரை எம்.பி ஆக்கினர். அப்போது மக்கள் குளச்சலை ஆதரிக்கின்றனர் என்று தானே அர்த்தம்?

2007ல் திருவொற்றியூர் முதல் திருச்செந்தூர் வரை கடற்கரை மாமன்றம் நடத்தியது பாஜக. 10 கிராமங்கள் ஒன்றாகத் திரண்டு வர ஒரு பாஜக தலைவர் உரை ஆற்றிய காலம் அது. இல. கணேசன், ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன் என 15 பாஜக தலைவர்கள் பங்கேற்றனராம். அதுபோல இப்போதும் கடற்கரை கிராமங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுக்கவுமே பிரச்சாரம் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது திருமதி விக்டோரியா கௌரி முதல் சுரேஷ் வரை பலரின் கருத்தாகும். நமது கருத்தும் அதுவே!                     

நன்றி ; பூமாகுமாரி விஜயபாரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...