ஹேமச்சந்திர வித்யாபீடத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

 சேர்ந்து படிக்க பணம் கிடையாது. அவரவர் தனிப்பட்ட தகுதி, தன்மைக்கேற்ப பாடங்கள். சான்றிதழும், அங்கீகாரமும் பண்டிதர்களிடமிருந்து, அரசிடமிருந்து இல்லை. ஆச்சார்யர் கல்வி, நிர்வாகம் அனைத்தையும் கவனிப்பவராக இருப்பார். நோக்கம், இப்போது இருக்கும் முட்டாள்தனமான மேற்கத்திய கல்வி முறையை அடியோடு அகற்றிவிட்டு பாரத கல்வியை புகுத்துவதே.

அரசு அங்கீகாரமே வேண்டாம் எங்களுக்கு. ஒன்று சபர்மதியிலும், இன்னொன்று சூரத்திலும், மூன்றாவது மும்பையிலும் உள்ளது. பாடங்கள் அவர்களே உருவாக்கியது. 7 வித்யா பாரதி கல்விக்கூடங்கள் இந்த முறையை ஏற்றுக்கொண்டு மாற்றிக்கொண்டுள்ளன கடந்த 9 ஆண்டுகளில்.

‘சமர்த்த பாரத கேந்திரம்' என்பது கொள்கை. தம்பதிகளை ஆதி ஞான சாஸ்திரம் அறிய வைப்பது. அது, தெய்வ குணம் மிக்க பிள்ளைகள் பிறக்க உதவும். தவிர வீட்டில் பிள்ளை ஐந்து வரை இருக்கவேண்டும். அதுவரை, அவர்களுக்கு கல்வியை பெற்றோரே முதல் குருவாக இருந்து கற்பிக்க இந்த சாஸ்திர ஞானம் உதவும்.

வெவ்வேறு வயதில் இருக்கும் பிள்ளைகளுக்காக இதுவரை பல மொழிகளில் 100 புத்தகங்கள் வரை வெளிவந்துள்ளன. இந்த வித்யாபீடம் " இல்லற தர்மம், ஆதி ஞான சாஸ்திரம், அகர் சாஸ்திரம், இல்லறத்துக்கு ஏற்ற தன சாஸ்திரம், இல்லற தர்ம சாஸ்திரம் சார்ந்த தலைப்புகளை பாடமாக எடுத்துக்கொண்டுள்ளது. பல ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு பிறகு பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

சமஸ்கிருதத்தில் இருந்த தர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதற்காகவே அன்று பாரத ரத்னா விருது வாங்கிய மேன்மை மிகு தரம்பால் அவர்களின் 10 தொகுப்புகள் பாடமாக உள்ளன. அதில், பாட திட்டமுறை எப்படி இருக்கவேண்டும், வியாபாரம் மற்றும் தொழில் முறை எப்படி இருக்கவேண்டும், கிராம ஜனநாயக முறை எப்படி இருக்கவேண்டும் போன்று பல விஷயங்கள் கல்வியாக போதிக்கப்படுகின்றன. இதை புரிந்து கொள்ளவே பாரத நாட்டு சிந்தனா முறையும் மனமும் வேண்டும்.

கற்றல், கற்பித்தல், மீண்டும் மீண்டும் படித்தல், ஆராய்தல், சிந்தித்தல், விவாதித்தல், மேற்ச்சொன்ன அனைத்தையும் சேர்ந்து செய்தல், இன்னின்னார்க்கு இன்னின்ன பாடங்கள் சரிப்பட்டு வரும் என்று தன்மையை ஆராய்ந்து அவரவர்களுக்கு ஏற்ற படிப்பை தருதல் இன்னும் போய்க்கொண்டே இருக்கிறது.

இது அத்தனையும் குருகுலம் முறைப்படி. குருகுலமும் அக்காலமுறைப்படி கட்டப்பட்டுள்ளது. நான்கு மூலைகளிலும் நாட்டு பசுக்களை அடக்கிய கோசாலை. பாரத நாட்டு வகையை சார்ந்த குதிரைகள், காளைகள் அதிக அளவில் உள்ளன.

மூன்று மாடி கட்டிடம், எல்லா சுவர்களிலும் உள்ளேயும் வெளியேயும் பசும்சாணி போட்டு மெழுகி வைத்துள்ளார்கள், உஷ்ணம் தெரியாமல் இருக்க. 80 ஆச்சார்யர்கள் 80 மாணவர்கள் இப்போதைக்கு.

60 ஆண்டுகளில் மொத்த கல்வி முறையையும் மாற்றுவது என்பது திட்டம். மக்களும் அரசும் ஒத்துழைத்தால் அவ்வளவு நாட்கள் ஆகாது.

ஐந்து கிரந்தங்களில் பாரதிய கல்வி முறையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்போகிறார்கள். இதை 2017 க்குள் முடிக்க திட்டம். இதில் வேத கணிதம், ரசாயன சாஸ்திரம், தர்க்க சாஸ்திரம், வியாகரண சாஸ்திரம், நியாய சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், ஆயுர்வேதம், தனுர் வேதம் அடங்கும்.

இப்போதைக்கு கற்பிக்கும் மொழிகள் சமஸ்கிருதம், குஜராத்தி, ஹிந்தி. மாணவர்கள் 5 முதல் 17 வயது வரை. தேர்ச்சி மட்டுமே, தோல்வி கிடையாது. இப்போது இல்லையென்றால் அப்புறம் தேர்ச்சி அவ்வளவுதான்.

புத்தி, மனதுக்கு கல்வி (சாஸ்திர ஞானம்) உடலுக்கு கல்வி(குதிரை ஏற்றம், மாடு மேய்த்தல், மல்கம்பு ) ஆத்மாவுக்கு கல்வி (சாஸ்திரிய முறையான வாழ்க்கை)

இது தவிர வெவ்வேறு வகையான தலைப்புகளில் பெரும் அறிஞர்கள் வந்து அவ்வப்போது பாடம் எடுக்கிறார்கள். இவர்களது அறிவுத்திறமையை பார்த்து பிரமித்து போகிறார்கள்.

அரசாங்கம் மட்டும் பணம் தருகிறோம், எதிலும் தலையிட மாட்டோம், பணத்தை என்ன செய்தீர்கள் என்று தணிக்கை மட்டும் செய்கிறோம் என்று ஒதுங்கி இருந்தால் அடித்து நொறுக்கலாம். இந்த நாடு இழந்த பழம் பெருமையான ஞான வாழ்க்கையை மீண்டும் அடைந்து உலகுக்கு வழிகாட்டியாக விளங்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...