காங்கிரசை கலைப்பது என்ற காந்தியின்விருப்பத்தை நிறைவேற்ற ராகுல் பாடுபடுகிறார் என பா,ஜனதா தலைவர் நிதின்கட்காரி பேசிஉள்ளார்.
கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்ட சபை தேர்தலுக்கான பணிகளில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின்கட்காரி மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் சந்தித்து பேசிவருகிறார். பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதின்கட்காரி, சுதந்திரத்துக்குப்பின் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என மகாத்மா காந்தி விரும்பினார். அவரது கனவை நிறைவேற்ற ராகுல்காந்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் காரர்கள் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
கோவா மாநிலத்தில் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் காங்கிரசாரும் இதற்கு தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் இருந்தே அகற்றப்படும். இதன்மூலம் காந்தியடிகளின் கனவு (காங்கிரசை கலைப்பது) கோவாவில் இருந்து நிறைவேறதொடங்கும், என்றார். மேலும் கோவா மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாஜக இணைவதற்கும் தீவிரமாக முயசித்து வருகின்றனர், இதுதொடர்பாக மனோகர் பாரிக்கர் மற்றும் பார்சேகர் முடிவு எடுப்பார்கள் என்றும் நிதின்கட்காரி கூறிஉள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.