''வரும் ஏப்., 1 முதல், ஜிஎஸ்டி., அமல்படுத்த, அரசு தீவிரமாக உள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.
டில்லியில், நேற்று நடந்த, பார்லி., ஆலோசனை குழுவின் நான்காவது கூட்டத்தில், அவர் பேசியதாவது: வரும் ஏப்., முதல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு சட்டத்தை அமல்படுத்துவதில், அரசு தீவிரமாக உள்ளது. . இதற்காக உருவாக்கப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் முதல்கூட்டம், திருப்தி கரமாக அமைந்தது. ஆண்டு மொத்தவிற்பனை, 20 லட்சம் ரூபாய்க்கு கீழ்உள்ளவர் களுக்கு, இந்தவரி விதிப்பில் இருந்து, விலக்கு அளிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பிரதேச மாநிலங்களில், இந்த உச்ச வரம்பு, 10 லட்சம் ரூபாயாக இருக்கும். மேலும், 1.5 கோடி ரூபாய் ஆண்டுக்கு நிகரவிற்பனை செய்வோர், மாநில வரி விதிப்பின் கீழ் வருவர்.
அதற்கு மேற்பட்டோர், மத்திய அல்லது மாநில வரிவிதிப்பின் கீழ்வருவர். இதற்கான வழிமுறை, விரைவில் வகுக்கப்படும். நாடுமுழுவதும் ஏற்கனவே உள்ள, 11 லட்சம் சேவைவரி பதிவு செய்துள்ளவர்கள், மத்திய வரி விதிப்பின்கீழ் வருவர்.மாநிலங்களுக்கான வரி இழப்பீட்டை, ஈடுசெய்வதற்கான அடிப்படை ஆண்டாக, 2015 — 16 நிதியாண்டு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கவுன்சிலின் அடுத்தகூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரைவு சட்டம், எந்தெந்த துறைக்கு விலக்கு போன்றவை குறித்து ஆராயப்படும். அக்.,17 முதல்,19 வரை நடைபெறும் கூட்டத்தில், வரி விகிதம் குறித்து ஆராயப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.